Monday, March 31, 2025
லெப்.கேணல் அக்பர்
புரட்சிமாறன் - விடுதலைப்புலிகள், கார்த்திகை 2006.
வட போர்முனையின் கட்டளைப்பணியகம். தொலைத்தொடர்புக் கருவி அக்பரைத் தேடுகிறது. தொடர்பு இல்லை. காலையில்தான் முன்னணி நிலைகளைப்பார்த்துவிட்டு, அணித் தலைவர்களைத் தயார்ப்படுத்துவதற்காக பின் தளத்திற்குப் போய் வருவதாகத் தளபதி தீபனிடம் கூறிச் சென்றவன். இன்னமும் வரவில்லை. மாலை 3.00 மணி அக்பரின் தொடர்பில்லை. மாலை 5.00 மணி தொடர்பில்லை. இரவு 8.00 மணி தொடர்பில்லை. தளபதியின் மனதில் சந்தேகம் தோன்றுகின்றது. நாளை விடிந்தால் எதிரி முன்னேறக்கூடும் என்ற தருணத்தில் அக்பர் ஒருபோதும் இத்தனை மணிநேரம் தொடர்பில்லாமல் நிற்கமாட்டான். நேரம் செல்லச் செல்ல தளபதியிடமும் ஏனைய போராளிகளிடமும் ஏக்கம் தொற்றிக்கொள்கிறது. அவனுக்கு ஏதும் நடந்துவிட்டதா? அவனை எப்படித்தான் நாம் இழக்கமுடியும்? எல்லோரும் அவனைத் தேடினார்கள். அவன் எத்தனை பெறுமதிக்குரிய வீரன். களங்களில் அவன் சாதித்தவைகள்தான் எத்தனை. நாளைக்கும் அவன் வேண்டுமல்லவா? அவன் எங்கே போய்விட்டான்?
அக்பர் பிறந்தது தவழ்ந்தது வளர்ந்தது எல்லாமே மட்டக்களப்பின் கதிரவெளியில்தான். போராட்டத்திற்கும் அவன் குடும்பத்திற்கும் நெருங்கிய ஒன்றிப்பிருந்தது. அண்ணன் அப்போது போராளியாய் இருந்தான். இந்திய இராணுவம் ஊருக்குள் நுழைந்து வீடுவீடாய்ப் புகுந்து இளைஞர்களை வீதிக்கு இழுத்துச் சித்திரவதை செய்தது. இந்த அவலங்களுக்கு அக்பரும் விதிவிலக்காகவில்லை. அவனை வீட்டிற்குள் வந்து இழுத்து வெளியே தள்ளினார்கள். ஜீப்பில் ஏற்றி முகாமிற்குக் கொண்டு போய்க் கட்டிவைத்துச் சித்திரவதை செய்தார்கள். அண்ணன் போராளியாய் இருந்ததைச் சொல்லி அவனை அவமானப்படுத்தினார்கள். இந்தத் தாக்கங்கள்தான் அவனையும் போராளியாக்கியது. 1990ஆம் ஆண்டில் வன்னிக்கு வந்த அவன் அடிப்படைப் பயிற்சிகளை மணலாற்றில் பெற்றதோடு அவனின் நீண்ட போராட்டவாழ்வு முளைவிடுகின்றது.
பல இரகசியப் பணிகளிலும் கடுமையான பயிற்சிகளிலும் ஈடுபட்ட அவன், சிறியசிறிய சண்டைகளிலும் பங்குகொண்டு தன்னை ஒரு சிறந்த போர்வீரனாக வளர்த்துக்கொண்டான். அக்பரின் இந்த வளர்ச்சித்திறன் சூரியக்கதிர் நடவடிக்கையின்போது முழுமையாய்த் தெரிந்தது. முன்னேறிவரும் எதிரியைத் தடுத்து நிறுத்தித் தாக்குதல் செய்வதற்கான வேவு நடவடிக்கைகளில் துணிச்சலாக ஈடுபட்டான். அவன் பார்த்த வேவுகளின்படி தாக்குதல்களும் நடந்தது. ஒரு சாதாரண போராளியாய் சண்டைக் களங்களைச் சந்தித்த அவன், வேவு அணிகளை வழிநடத்தும் அணித் தலைவனாக வளர்ந்தான். இந்த நாட்களில்தான் முல்லைத்தீவிலிருந்த இராணுவத்தின் படைத்தளம் மீது ஓயாத அலைகள் - 01 என்ற பெயரில் பாரிய படைநடவடிக்கையைத் தலைவர் அவர்கள் திட்டமிட்டுத் தயார்ப்படுத்தினார். இந்தத் தாக்குதலுக்கு இம்ரான் பாண்டியன் படையணியின் முறியடிப்பு அணியின் பற்றாலியன் உதவிக் கட்டளை அதிகாரியாக அக்பர் நியமிக்கப்பட்டான். எதிரி நினைத்திராத பொழுதில் முல்லைத்தீவுத் தளத்தில் அடிவிழுந்தபோது சிங்களம் திகைத்தது. யாழ்ப்பாண ஆக்கிரமிப்பிற்குப் பலமாய் நிற்கும் முல்லைத்தீவுத்தளத்தை இழக்கவிரும்பாமல் கடைசிவரை அதைத் தக்கவைக்க கடும் முயற்சி செய்வார்கள் என்பது தலைவருக்கு நன்கு தெரியும். முல்லைத்தீவுப் படைகளைக் காப்பாற்ற சிங்களப்படை தரையிறக்கம் ஒன்றைச் செய்யும் என்பதை உய்த்தறிந்த தலைவர் அவர்கள், அணிகளைத் தயாராய் வைத்திருந்தார். எதிர்பார்த்தபடி அளம்பிலில் சிங்களப்படை வந்துதரையிறங்கியது. ஒரு தன்மானப்போர் அங்கேநடந்தது. கட்டளை வழங்கும் தளபதியாய் இருந்த அக்பர் சண்டை இறுக்கம் அடைந்தபோது தானும் களத்திற்குள் புகுந்துவிட்டான். திறமையாய் அணியை வழிநடத்தினான். அளம்பில் மண்ணில் எதிரியைக் கொன்று போட்டான். முல்லைத்தீவுச் சமர் முடிந்து ஓயாத அலைகள் - 01 நடவடிக்கை வெற்றிவாகை சூடியபோது, அக்பர் ஒரு சிறந்த சண்டைக்காரனாக வெளிப்பட்டான்.
முல்லைத்தீவில் அடிவாங்கிய சிங்களப்படை, தங்கள் அவமானச் சின்னங்களை இல்லாமல் செய்வதற்காக 'சத்ஜெய' என்ற பெயரில் கிளிநொச்சியை ஆக்கிரமிக்கும் படைநடவடிக்கையை ஆரம்பித்தது. பரந்தனில் சிங்களப் படைகளை எதிர்கொண்ட புலிவீரர்கள் கடும் சமர்புரிந்தார்கள். சிங்களப்படை டாங்கிகள் சகிதம் எங்கள் பகுதிகளுக்குள் புகுந்து கொண்டிருந்தது. சண்டை நடந்த இடத்திலிருந்து 500 மீற்றர் தூரத்தில் கட்டளைகளை வழங்கிக் கொண்டிருந்தஅக்பர், சண்டையின் இறுக்க நிலையைப் புரிந்து கொண்டு உடனே சண்டை நடந்த இடத்தை நோக்கி ஓடினான். உடனடியாக முடிவெடுத்து அங்கு நின்ற ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்தி வைத்திருந்த மூன்று வீரர்களை ஒன்றாக்கி முன்னேறிவந்த டாங்கிகள் மீது ஒரு துணிச்சலான தாக்குதலை மேற்கொண்டான். இந்தத் தாக்குதலில் இரண்டு டாங்கிகள் எரிந்து அழிந்தது. இக்கட்டான ஒரு சூழ்நிலையில் அக்பரின் விரைவானதும் நுட்பமானதுமான இந்தத் திட்டம் வெற்றிகரமாய் நிறைவேறியது. அன்றைய நாளில் எதிரியின் முன்னேற்ற முயற்சியைத் தடுத்து நிறுத்தியதில் அக்பர் முக்கிய காரணமாய் இருந்தான்.
ஏ - 9 வீதியைப் பிடித்து யாழ்ப்பாணத் திற்குத் தரைவழிப் பாதையைத் திறக்கும் பாரிய நில ஆக்கிரமிப்பிற்கு ரத்வத்தவின் பேரிகை முழக்கத்தோடு, தொடங்கப் போகும் ஷஜயசிக்குறு படைநடவடிகையை முறியடிக்கும் திட்டத்தில் தலைவர் அவர்கள் அதிக நேரத்தைச் செலவிட்டார். டாங்கிகளை எதிரி அதிகம் பயன்படுத்துவான் என்பதையும் தலைவர் புரிந்துகொண்டார். இந்த டாங்கிகளைச் சிதைப்பதற்காக ஒரு படையணியை உருவாக்குதவற்கு முடிவெடுத்து அதற்கான கட்டளைத் தளபதியாக யாரைத் தெரிவு செய்யலாம் எனத் தேடியபோது அதற்குப் பொருத்தமானவனாய் தலைவரின் கண்ணுக்குள் தோன்றியது அக்பரின் முகம்தான். சத்ஜெய முறியடிப்புச் சமரில் அக்பரின் திறமையினைத் தலைவர் அவர்கள் இனம் கண்டுகொண்டார். அக்பரின் தலைமையின்கீழ் இம்ரான் பாண்டியன் படையணியின் சிறப்புப்பயிற்சிபெற்ற போராளிகள் விக்டர் விசேட கவச எதிர்ப்பு அணியாக உருவாகினர். இந்தப்படையணியில் நுழைந்த அனைவருக்கும் கடும்பயிற்சி. அக்பரில் தொடங்கி சாதாரண போராளி வரைக்கும் எல்லோரும் பயிற்சியெடுத்துத் தேர்வின்போது சித்தியெய்திய பின்னரே இந்த அணிக்குள் நுழைந்தனர். அக்பர் ஒரு கட்டளை அதிகாரியாய் இருந்தபோதும் ஒவ்வொரு போராளிக்குமுரிய எல்லாக் கடமையையும் தானும் நிறைவேற்றினான். ஒவ்வொரு சின்னச்சின்ன விடயங்களிலும் கவனமெடுத்தான். போராளிகளுக்கும் தனக்குமான இடைவெளியைக் குறைத்து ஒரு நெருக்கமான, இறுக்கமான உறவை ஏற்படுத்தினான். எல்லாக் கடின பயிற்சிகளிலும் தானும் ஈடுபட்டபடி மற்றப்போராளிகளையும் உற்சாகப்படுத்துவான். பயிற்சித் தேர்வின்போது எந்தப் போராளியும் சித்தியெய்தாமல் விடக்கூடாது என்பது அவனது நோக்கமாய் இருந்தது. அப்படித்தேர்வில் சித்தியெய்தத் தவறியவர்களை மீண்டும் மீண்டும் பயிற்சியில் ஈடுபடுத்திச் சித்தியெய்த வைத்தான்.
பயிற்சியுடன் மட்டும் நின்றுவிடாமல் போராளிகளுக்கு உணவு கொடுப்பதைக்கூட தானே நேரில் நின்று உறுதிப்படுத்திக்கொள்வான். ஒருமுறை மதியவேளையில் போராளிகளுக்குக் கொடுக்கும் பசுப்பாலைக்காய்ச்சும்போது எரித்துவிட்டார்கள். அதன்பின், தான் நிற்கும் நேரங்களில் தானே பால் காய்ச்சி போராளிகளுக்குக் கொடுப்பான். போராளிகள் தவறிழைத்தால் அல்லது அலட்சியமாகச் செயற்பட்டால் அவன் எடுக்கும் நடவடிக்கை போராளிகள் எதிர்காலத்தில் எச்சந்தர்ப்பத்திலும் அத்தகைய தவறுகளை விடாதபடி படிப்பினை மிக்கதாய் இருக்கும். ஒருநாள் போராளிகள் கிணற்றடியில் குளித்துக் கொண்டிருந்தார்கள். அக்பரும் குளிப்பதற்காக கிணற்றடிக்கு வந்தான். அந்தச் சூழலை அவன் மேலோட்டமாய்ப் பார்த்தபோது அன்று காலையில் கிணற்றடி சுத்தம் செய்யப்படாமல் பாவித்த பொருட்களின் தடயங்கள் அப்படியே கிடந்தது. அக்பர் ஒன்றும் பேசவில்லை. யாரையும் குறையுறவுமில்லை. விடுதியில்போய் விளக்குமாறினை எடுத்துக்கொண்டுவந்து தானே கிணற்றடியைச் சுத்தப்படுத்தினான். போராளிகள் அப்பொழுதுதான் விழித்துக்கொண்டவர்களாய் விளக்குமாறினை வாங்கிச் சுத்தப்படுத்த முனைந்தார்கள். அக்பர் யாரையும் அதற்கு அனுமதிக்கவில்லை. அன்றையநாளில் அந்தப் பகுதியை முழுமையாய் தானே சுத்தப்படுத்தினான். அதன் பின்புகூட அவன் அதைப்பற்றி யாரிடமும் எதுவும் பேசவில்லை. அக்பரின் இந்தச் செயற்பாடு போராளிகளின் விழிகளைக் கசியச்செய்தது. அதன்பின் ஒருபோதும் அந்தத் தவறைப் போராளிகள் விட்டதில்லை. அக்பரின் இந்தப் பண்பும் தவறிழைத்தவர்களைக் கூட யாரிலும் நோகாமல் தன்னைமட்டுமே வருத்தி அதற்குத் தீர்வுகாணும் திறனும் போராளிகளிடத்து ஒரு தந்தைக்குரிய நிலையை அவனுக்குப் பெற்றுக்கொடுத்தது. அக்பர் விளக்குமாறு பிடிப்பதில் மட்டுமல்ல களத்திலே ஆயுதம் பிடித்துச் சுடுவதுவரை இதே முடிவைத்தான் கடைப்பிடித்தான். அக்பரின் உச்சமான வளர்ச்சிகளுக்கு இதுவே அடிநாதமாய் இருந்தது.
நீண்ட எதிர்பார்ப்புகளோடு தலைவர் இந்த அணியை உருவாக்கினார். 1997ஆம் ஆண்டு வைகாசி 13ஆம் திகதி. புத்தபிரான்முன் சபதம் எடுத்துக்கொண்டு வன்னி மீது 'ஜயசிக்குறு' என்ற பெயரில் பாரிய இராணுவ நடவடிக்கையை சிங்களம் தொடங்கியது. தயாராய் இருந்த விடுதலைப்புலிகளின் படையணிகள் களத்திலே எதிரியை நேருக்குநேர் எதிர்கொண்டனர். மனோபலத்திலே எங்களுக்குக் கீழே நின்ற எதிரி ஆயுதபலத்தில் எங்களுக்கு மேலே நின்றான். சண்டைகளின் போது டாங்கிகளை முன்னணிக்கு அனுப்பி டாங்கிகளின் சுடுகுழல்களால் எங்கள் காப்பரண்களைச் சல்லடைபோட்டுக்கொண்டு அந்த இரும்புக் கவசங்களின் மறைவில் பதுங்கிப் பதுங்கி எங்கள் பகுதிகளுக்குள் நுழைந்தனர். இந்தச் சூழலை எதிர்பார்த்து அதற்கென்றே தயாராய் இருந்த அக்பரின் அணி, களத்தை நேரடியாய்த் தரிசித்தது. எதிரி ஒவ்வொரு அடிநிலத்தையும் ஆக்கிரமிப்பதற்கு அதிகவிலை கொடுத்தான்.
25.05.1997 மன்னகுளத்தில் ஒரு கடுமையான முறியடிப்புச் சமரை எங்களது படையணிகள் நடாத்தின. டாங்கிகள் பரவலாய் முன்நகர்ந்தன. அக்பர் கட்டளை வழங்கும் காப்பரணில் நின்றபடி ஆர்.பி.ஜி ஏந்திய தனது போராளிகளை வழிநடத்திக்கொண்டிருந்தான். போராளிகள் எதிரியுடன் நெருங்கிநின்று சண்டைபிடித்தனர். சண்டை உச்சமடைந்து கைகலப்புச் சண்டையாக மாறியது. இந்த வேளையில்தான் ஆர்.பி.ஜி கொமாண்டோ வீரன் பாபு வீரச்சாவடைந்த செய்தி அக்பரின் காதிற்கு எட்டுகின்றது. அக்பரின் இரத்த நாளங்களில் துடிப்பு அதிகரிக்கின்றது. எத்தனை பாசமாய் அவன் வளர்த்த வீரர்கள் மடிந்துகொண்டிருந்தபோது அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நேரே சண்டை நடந்த இடத்திற்கு ஓடினான். எதிரிமீதான அவனின் ஆவேசம் அங்கு வீழ்ந்துவெடிக்கும் எறிகணைகளின் தாக்கத்திலும் மேலானதாய் இருந்தது. ஒரு கட்டளை அதிகாரியான அக்பர் களத்திலேதான் வளர்த்தவர்களின் அருகில் நின்றபடி, பாடசாலை வகுப்பில் பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசானைப்போல் களத்திலே சீறியபடி செல்லும் ரவைகளுக்குள்ளும் நெருப்புத் துண்டங்களாய் உடலைக் கிழித்தெறியத் துடிக்கும் எறிகணைத் துண்டங்களையும் அலட்சியம் செய்தபடி டாங்கிகளைச் சிதறடிக்கும் வழியைக் காட்டினான். றம்பைக்குள மண் அதிர்ந்தது. அந்தப்பொழுதில் அக்பர் அவர்களுக்குள் ஒருவனாய் நின்று ஆடிப்பாடி வளர்த்த நான்கு இளம் போராளிகளை விலையாய்க் கொடுத்து இரு டாங்கிகளையும் ஒரு துருப்புக்காவியையும் அழித்து இரு டாங்கிகளைச் சேதமாக்கியும் எதிரியின் கவசப்படைக்கு வலுவான அடியைக்கொடுத்தான்.
இத்தாக்குதல் முறியடிப்பின் மூலம் களத்தை முழுமையாய் வழிநடத்தும் கட்டளைத் தளபதிகளுக்கு விக்டர் விசேட கவசஎதிர்ப்பு அணியின் செயற்பாட்டில் சங்கடமற்ற செயற்திறன் மீதான நம்பிக்கையை அக்பர் ஏற்படுத்திக்கொடுத்தான்.
10.06.1997அன்று தாண்டிக்குளத்தில் தளம் அமைத்திருந்த ஜயசிக்குறு படைமீது ஒரு வலிந்த தாக்குதலை எமது படையணிகள் மேற்கொண்டன. இந்தக் களத்திலும் எதிரியின் டாங்கிகளின் நகர்வை முறியடிக்க ஒரு பிளாட்டூன் போராளிகளுடன் அக்பர் களமிறங்கினான். சண்டை உக்கிரமாய் நடந்தது. எதிரியை அண்மித்து மேற்கொண்ட இத்தாக்குதலின் ஒரு கட்டத்தில் அக்பர் விழுப்புண் அடைகின்றான். விழுப்புண்ணின் வலி அவன் உடலை வருத்தியதை விட எதிரி எங்கள் தேசம்மீது மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பின் வலி அதிகமாய் இருந்தது. விழுப்புண்ணிற்கு இரத்தத்தடுப்புத் துணியைக் கட்டிக்கொண்டு தொடர்ந்தும் தன் அணியை வழிநடத்திச் சண்டையிட்டான். இச்சண்டையில் இரு டாங்கிகளைத் தாக்கி அழித்து ஒரு துருப்புக்காவியைச் சேதமாக்கி தாக்குதல் ஓய்விற்கு வந்தபின்னரே அக்பர் தளம் திரும்பினான்.
அக்பர் களங்களில் சாதித்த வெற்றிகளுக்கு அவன் வளர்த்த அணித் தலைவர்களும் காரணமாயிருந்தனர். தன்னிடமிருந்த நற்பண்புகளை அவர்களுக்கும் ஊட்டி வளர்த்தான். தனித்து முடிவெடுத்துச் செயற்பட வேண்டிய நேரங்களில் அதற்கும் சந்தர்ப்பம் கொடுத்தான். கட்டம் கட்டமாய்ப் பாரிய இழப்புக்களைச் சந்தித்தபடி முன்னேறிய எதிரிப்படையைப் புளியங்குளத்தில் வைத்து ஒரு வலிமையான தடுப்பு அரண் அமைத்துச் சண்டையிட்டன எமது படையணிகள்.
19.08.1997 அன்று காலைப்பொழுது. பேரிரைச்சலைக் கிளப்பியவாறு வேகமாய் வந்த டாங்கிகளும் துருப்புக்காவியும் எங்களது காப்பரண்களை ஏறிக்கடந்து புளியங்குளம் சந்தியை மையப்படுத்தியிருந்த எமது தளத்திற்குள் நுழைந்தன. நிலைமையைப் புரிந்துகொண்டு சுதாகரித்த எமது அணிகள் முகாமிற்குள் எதிரியைச் சல்லடை போட்டார்கள். ஆர்.பி.ஜி கொமாண்டோப் போராளிகளுக்கு மேஜர் காவேரிநாடன் கட்டளை வழங்கி வழிநடத்த முகாமிற்குள் நுழைந்த எதிரியுடன் பதட்டமில்லாமல் சமரிட்டு இரண்டு டாங்கிகளை அழித்தும் ஒரு துருப்புக்காவியைக் கைப்பற்றியும் சிலவற்றைச் சேதமாக்கியும் எதிரியின் கனவைச் சிதைத்து ஓட ஓட விரட்டியடித்தனர். இந்தச் சண்டையின்போது அக்பர் களத்தில் இல்லாபோதும் அவன் வளர்த்த அணித்தலைவர்களும் போராளிகளும் விக்ரர் விசேட கவச எதிர்ப்பு அணியின் பெயரை நிலைநிறுத்தினர்.
இப்படி ஜயசிக்குறு களத்தில் அக்பர் பல சண்டைகளை எதிர்கொண்டான். ஒவ்வொரு சண்டைகளிலும் எதிரியின் டாங்கிப்படைக்கு நெடுக்குவரியைக் கண்டால் குலைநடுங்கும்படி உருவாக்கினான். எப்போதாவது டாங்கிகள் பேசுமாயின் தாங்கள் நடுங்கிப்பயந்து ஒடுங்கிப்போனது பற்றி அவைகூடச் சொல்லும். ஏனென்றால் அக்பர் தன் போராளிகளை வைத்து களங்களில் அப்படித்தான் சாதித்தான்.
ஓயாத அலைகள் - 02 நடவடிக்கை தலைவர் அவர்களால் திட்டமிடப்பட்டு கிளிநொச்சி நகரையும் பரந்தனையும் ஊடறுத்து எதிரியை இரண்டாகப் பிரித்துத் தாக்கும் அணிகளுடன் விக்ரர் விசேட கவச எதிர்ப்பு அணியும் இணைக்கப்பட்டது. சண்டை தொடங்கியதும் ஊடறுப்பு அணிகள் உள்நுழைந்தன. கிளிநொச்சிப் படைத்தளம் தனிமைப்படுத்தப்பட்டது. வயல்வெளிகளுக்குள் இரண்டு பகுதியாலும் முன்னேற முயலும் எதிரியைத் தடுத்துநிறுத்தும் களச் செயற்பாட்டில் அணிகள் ஈடுபட்டன. கிளிநொச்சித்தளம் மீது பலமுனைகளில் அழுத்தம் கொடுத்துத் தாக்குதல்தொடுக்க முற்பட்டபோது கிளிநொச்சியைத் தம்முடன் இணைப்பதற்காக பரந்தனில் இருந்து டாங்கிகள் சகிதம் படையினர் முன்னேறினர். இவர்களை வழிமறித்த ஏனைய படையணிப் போராளிகளும் விக்டர் விசேட கவச எதிர்ப்பு அணிப் போராளிகளும் கடும் சமர்புரிந்தனர்.
அவ்வேளையில் நிலைகளைப் பார்த்து உறுதிப்படுத்தியபடி வந்துகொண்டிருந்த அக்பரும் ஏ - 9 பிரதான சாலையை அண்மித்திருந்தார். முன்னேறிய டாங்கிகளைத்தாக்கி அழிக்கும் பொறுப்பை மணிவண்ணனிடம் ஒப்படைத்துவிட்டுத் தான் நின்ற பகுதி நோக்கி வந்துகொண்டிருந்த துருப்புக்காவி ஒன்றினை அருகில் நின்ற கொமாண்டோ வீரனின் ஆர்.பி.ஜியை வாங்கித் தானே தாக்கியழித்தான். இந்தத் தாக்குதலில்தான் லெப்.கேணல் மணிவண்ணனும் ஒரு டாங்கியைத் தாக்கியழித்தான். தங்களது கவசங்கள் உடைந்ததால் எதிரியின் உளவுரனும் உடைந்தது. பரந்தனையும் கிளிநொச்சியையும் இணைக்கும் அவர்களின் கனவு கைகூடாமல் போனது. கிலேசமடைந்த சிங்களப்படை கிளிநொச்சியைவிட்டுத் தப்பியோடியது.
இதேபோன்றுதான் 26.06.1999 பள்ளமடுப் பகுதிமீது மேற்கொள்ளப்பட்ட ரணகோச நடவடிக்கை மீதும் அக்பரின் படையணி முத்திரை பதித்தது. இந்தச் சண்டையில் எதிரி டாங்கிகளைக் கூடுதலாகப் பயன்படுத்தி டாங்கி நகர்வாகவே மேற்கொண்டான். ஆர்.பி.ஜி அணிக்கு இது ஒரு சவாலான சண்டையாக இருந்தது. டாங்கிகள் உந்துகணைகளை அந்தநிலம் முழுவதும் விதைத்தது. காப்பு மறைப்புக்கள் பெரிதாக இல்லாத அந்த நிலத்தில் நின்றபடி அக்பர் தெளிவாகக் கட்டளைகளை வழங்கினான். அக்பரின் கட்டளைக்கேற்ப நிலைகுலையா வலிமைகொண்ட போராளிகள் கடும் சமர்புரிந்தனர். இந்தச் சண்டையின் முடிவில் ஏழு போராளிகள் உயிர்களைத் தாயக தேசத்திற்காகக் கொடுத்து ஆறு டாங்கிகளை எரித்தழித்திருந்தனர். எதிரியின் கவசப்படையின் பலத்தை விக்ரர் விசேட கவசஎதிர்ப்பு அணி நிலைகுலையச் செய்தது.
இப்படித்தான் ஜயசிக்குறுப் படை மூக்கை நுழைத்த திசையெல்லாம் அக்பர் செயலால் தன்னை வெளிப்படுத்தினான். அக்பரின் குறியீட்டுப்பெயர் 'அல்பா - 1'. களத்திலே 'அல்பா - 1' வந்துவிட்டால் எல்லாப் போராளிகளுக்கும் உடலில் புது இரத்தம் ஓடும். களத்தில் 'அல்பா - 1' இன் ஆட்கள் வந்தால் எதிரிப்படைக்கு வியர்த்து ஓடும். அப்படித்தான் அக்பர் சாதித்தான். அக்பர் எந்தச் சூழ்நிலையிலும் எக்கணத்திலும் தனித்து முடிவெடுத்துச் செயற்படுத்தும் திறன்வாய்ந்தவன். ஒட்டிசுட்டான் பகுதியை ஆக்கிரமிக்கும் நோக்கோடு இரகசிய நகர்வின்மூலம் எதிரி எமது பகுதிக்குள் நுழைந்த செய்தி அக்பரின் காதுக்கு எட்டிய உடனேயே தனது போராளிகளின் ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்திகளை வாங்கிக்கொண்டு அவர்களின் கையில் துப்பாக்கிகளைக் கொடுத்து அணியினைத் தயார்ப்படுத்தும்படி கூறிவிட்டு எதிரி முன்நகர்ந்த இடங்களைக் கண்டறிவதற்கு அக்பர் உடன் விரைந்தான். அப்போது அக்பரின் முகாம் அந்தப் பிரதேசத்தை அண்டிய பகுதியில்தான் அமைந்திருந்தது. முன்னேறிய எதிரியை நகரவிடாமல் உடனடியாகவே ஒரு தடுப்பு நிலையை உருவாக்கி நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஏனைய தாக்குதல் அணிகள் அந்த இடத்தைப் பொறுப்பேற்கும்வரை அவனே அந்த நிலைகளைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தான்.
ஆனையிறவை வீழ்த்துவதற்காக இத்தாவிலில் ஒரு தரையிறக்கத்தினைச் செய்து ஒருமாத காலம் சமர் புரிந்தபோது அக்பரும் அவன் போராளிகளும் எதிரியின் கவசப்படையின் முன்னேற்ற முயற்சிகள்அனைத்தையும் முறியடித்துப் பல கவசங்களைச் சிதைத்தனர். இத்தாவிலில் சிங்களம் சந்தித்த தோல்விக்கும் ஆனையிறவை வீழ்த்தி விடுதலைப்புலிகள் வெற்றிவாகை சூடியதற்கும் அக்பரிற்கும் அவன் படையணிக்கும் பெரும் பங்கிருந்தது.
விடுதலைப்புலிகளிடம் வீழ்ந்துவிட்ட ஆனையிறவை மீளக் கைப்பற்றும் நோக்கோடு 'தீச்சுவாலை' என்ற பாரிய இராணுவ நடவடிக்கையை எதிரி மேற்கொண்டபோது டாங்கிகளை அவன் முந்நிலைப்படுத்தவில்லை. 'ஜயசிக்குறு' களச் சமர்களின்போது இஸ்ரேல் தயாரிப்பில் உருவான டாங்கிகளையும் துருப்புக்காவிகளையும் அக்பர் நொருக்கி அழித்தான். அவற்றின் சுழல்மேடையினையும் சுடுகலங்களையும் தன் காலடிக்குள் பணியவைத்தான். ஒட்டுமொத்தமாய் களத்தில் டாங்கிகளின் செயற்திறனை பூச்சியத்திற்குக் கொண்டுவந்தான். தலைவர் அவர்கள் எப்படிக் கற்பனைசெய்து இந்த விக்ரர் விசேட கவச எதிர்ப்பு அணியை உருவாக்கினாரோ, அந்தக் கனவில் சிறிதும் பிசிறல் இல்லாமல் நினைத்ததை அப்படியே தனது அணியைவைத்து அக்பர் செய்து முடித்தான். இரும்புக் கவசத்தின் வலிமையைச் சிதைத்து விடுதலைப்போராளிகளின் வலிமையை உலகிற்குக் காண்பித்தான்.
அக்பர் இப்படிப்பல பணிகளைப் புரிந்தான். பின்னாளில் பல அணிகளை இணைத்தும், பல நவீன ஆயுதங்களை உள்ளடக்கியதுமான அணிகளையும் அக்பர் வழிநடத்தினான். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின் மட்டக்களப்பின் ஆண்டாங்குளப் பொறுப்பாளராகத் தலைவரின் விசேட பணிப்பின் பேரில் சென்றுபணிபுரிந்தான். களப்பணியையும் மக்கள் பணியையும் ஒன்றாகச் செய்தான். தூர இடங்களுக்குக்கூட கால்நடையாகச் சென்று வேவுபார்த்துத் தாக்குதல்கள் மேற்கொள்வது, மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது என அவன் எப்போதும் இயங்கிக்கொண்டிருந்தான். ஒருதளபதியாய் இருந்தபோதும் ஒரு சாதாரண போராளியாகவே தன்னை கருதிக் கொள்வதும் ஏற்றத்தாழ்வு இன்றி எல்லோரையும் மதித்து நடப்பதும் பண்பான வார்த்தைகளால் கதைப்பதும் புன்சிரிப்பை மெல்லியதாய் பரவவிடுவதும் அவனுடன் கூடப்பிறந்த குண இயல்புகள்.
இந்த வீரன் 23.05.2005இல் தமிழீழத்தேசியத் துணைப்படையின் வடபோர்முனைக்கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டான். அன்றிலிருந்து முன்னணி நிலைகளுள் அவர்களுடன் வாழ்ந்து ஒரு சிறந்த படையாக அதை உருவாக்கினான். 11.08.2006இல் முகமாலையில் எதிரி முன்னேறியபோதும், தொடர்ந்துவந்த சண்டைகளிலும் தேசியத்துணைப்படை எதிர்பார்த்ததிலும் அதிகமாய் அல்லது எதிர்பார்க்காத வகையில் சண்டையிட்டதாயின் அதன் ஆணிவேராய் இருந்தது அக்பர்தான். அக்பர் கட்டளை வழங்கினால் அவர்கள் சாதிப்பார்கள், அல்லது சாதனைக்காய் மடிவார்கள். அக்பர் அப்படித்தான் வாழ்ந்தான்.
இந்த வீரன்தானே எதிரியின் எறிகணை வீச்சில் எங்களை விட்டுப்பிரிந்து போனான். அவனுடன் கூடப்போன சாதுரியனும் அன்று மடிந்தான். அக்பரின் பிரிவு தளபதிகளில் இருந்து போராளிகள் வரை எல்லோரின் இதயத்தையும் ஒருமுறை உலுப்பி விழிகசிய வைத்தது. அக்பர் என்ற பெயருக்கு களத்தில் ஒரு வலிமை இருந்தது. ஒவ்வொரு ஆர்.பி.ஜி கொமாண்டோ வீரனின் வலிமையும் அக்பர்தான். அந்த வீரனின் நினைவுகளைச் சிறப்புத்தளபதிகளுடன் பகிர்ந்துகொண்டபோது அவன் ஒரு களஞ்சியமாய்த் தோன்றினான். அக்பர் ஒரு பண்பான போராளி, பெருந்தன்மையில்லாது பெரிய சாதனைகளைப் படைத்த சுத்தவீரன். தலைவன் நினைத்ததைச் செய்துமுடித்தவன், எச்சந்தர்ப்பத்திலும் எந்த வளப்பற்றாக்குறையிலும் பெரிய வேலைகளையும் அமைதியாய் செய்துமுடிப்பவன். சொல்வதைச் செய்வான், செய்வதைச் சொல்லமாட்டான். இரும்பின் வலிமையை மிஞ்சிய தந்திரசாலி. எல்லாவற்றிற்கும் மேலாய் அக்பர் எங்களின் இராணுவச் சொத்து.
இத்தனை செயற்திறன் மிக்க வீரன்எங்களுக்குள் சத்தமில்லாமல் நடமாடித்திரிந்தான். களத்திலே இப்போதும் அவன் நிறையச் செய்யத்துடித்தான். உறங்குநிலையில் இருந்த ஆர்.பி.ஜி அணியை மீண்டும் இயங்குநிலைக்குக் கொண்டுவந்து பாரிய நடவடிக்கை ஒன்றினை முறியடிக்கும் முன்னாயத்தச் செயற்பாட்டின்போது அவன் மடிந்துபோனான். ஆயினும் அந்தப் பெயரின் வலிமை இப்போதும் இருக்கிறது. அக்பர் வீழ்ந்தபின்னும் அவன் வளர்த்த போராளிகள் எதிரியின் டாங்கிகளைநொருக்கினார்கள். 'தலைமைத்துவத்தின் பண்பு என்பது அவன் உயிருடன் இருக்கும்போது மட்டுமல்ல, அவன் வீழ்ந்துவிட்ட பின்பும் அவனின் கட்டளைகளை நிறைவேற்றுவது தான் அவன் தேடிவைத்த சொத்து.' அக்பர்இந்தச் சொத்தை அதிகம் தேடிவைத்திருக்கிறான்.
கடைசியில், அக்பருக்கு ஒரு ஆசையும் ஆதங்கமும் இருந்தது. அக்பர் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான போராளி. அவன் களங்களிலேயே அதிகம் வாழ்ந்தவன். தன் குழந்தைகளோடு கொஞ்சிவிளையாட அவனுக்கு நேரம் கிடைத்தது குறைவு. எங்காவது ஒரு பொழுதில் வீட்டிற்குச் சென்றாலும் தங்கி நிற்கமாட்டான். துணைவி மறிப்பாள். அவளின் வேண்டுகை அவனுக்குப் புரியும். அவளைத் தலைவரின் படத்திற்கு முன் கூட்டிவருவான். தலைவரின் படத்தைக்காட்டி, 'அண்ணை நிறைய எதிர்பார்க்கிறார். அண்ணையைப்போல நாங்களும் செயற்படவேணும். பட்ட கஸ்ரங்களோடு சேர்ந்து எல்லாரும் கஸ்ரப்பட்டா கெதியில விடிவு கிடைக்கும். விடிவு கிடைச்சா என்ர குழந்தைகளோட செல்லங்கொஞ்சி அவையள நான் வடிவா வளர்ப்பன்தானே' என்று கூறிவிட்டுப் போய்விடுவான். அப்படியே அவன் போய்விட்டான். தனக்கென்று வாழாத இந்த உன்னத வீரனின் கடைசி ஆசைப்படி அவனின் குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்தை நாம்தானே போராடிப் பரிசளிக்க வேண்டும்.
நான் வளர்த்த போராளி கப்டன் மொறிஸ்
![]() |
| கப்டன் மொறிஸ் (M. O) பரதராஜன் தியாகராஜா (பரதன் ) லெப். ரம்போ (தணிகாசலம் ஜெகநேசன்) வீரவேங்கை சிறீ (வடிவேலு சிறீதரன்) |
ஒவ்வொரு போராளிக்குள்ளும் ஒவ்வொரு பெரும் கதை இருக்கும். சில போராளிகள்
காவியம் போன்றவர்கள். அவர்களைப் பற்றி அவர்களுடன் வாழ்ந்தவர்கள் எழுதும்
பொழுது மனம் சற்று சிலிர்த்துக் கொள்ளும். கப்டன் மொரிஸ் என் நிர்வாகத்துள்
தனது போராட்ட வாழ்வை தொடங்கினார், என்று எழுதும் பொழுது என் கண்கள்
பனித்து மனதில் அவன் முகம் நேராக தன்னில் வந்து தோன்றுகின்றது.
ஆயிரத்து
தொளாயிரத்து எண்பத்தி நான்காம் ஆண்டு சிங்கள இராணுவம் எங்கும் எப்பொழுதும்
திடீர் திடீர் என்று சுற்றி வளைக்கும். அன்று கப்டன் ரஞ்சன் லாலா
வடமராட்சியில் தொண்டைமானாறு பகுதியில் தங்கி இருந்த போராளிகளுக்கு
(பைலட்டின் ) வழிகாட்டியாக முன் இருசக்கர வாகனத்தில் வல்வட்டித்துறை நோக்கி
செல்கின்றார். எதிர்பாராத விதமாக இராணுவத்தை சந்திக்கின்றார். அவர்
பின்னால் மிக முக்கிய தளபதிகள் கிட்டு உட்பட வந்து கொண்டு இருக்க இராணுவம்
வந்து விட்டது. உடனடியாக இராணுவம் வந்து விட்டது என்று தனது சக
போராளிளுக்கு சமிக்கை செய்ய, துணிந்து தனது உயிரை துச்சமாக கருதி
இராணுவத்துடன் தனித்து மோதுகின்றார். ஏறக்குறைய ஐந்து நிமிடம் தனித்து
நின்று தாக்கி பின் தொடர்ந்த போராளிகளை தப்பி செல்லும் அளவுக்கு நேரத்தை
கொடுத்து பின் இராணுவத்தின் போக்கை திருப்பி வேறு திசையில் தனது பின்னே
வேறு திசையில் இழுத்து செல்கின்றார். அவரை பின்தொடர்ந்து ஐம்பதுக்கும்
மேற்பட்ட இராணுவம் அவரை நோக்கி சுட்டவாறு செல்கின்றது. ஏனைய போராளிகள்
மற்றைய வீதி ஊடாக தப்பித்து செல்கின்றார்கள். கப்டன் லாலா வீரமரணம் அடைந்து
தனது சக போராளிகள் அனைவரையும் காப்பாற்றி இருந்தார்.
அந்த
மாவீரனுக்கு ஒரு அஞ்சலிக் கூட்டத்தை தம்பசிட்டி பள்ளிக்கூடம் பின் உள்ள
நிலத்தில் நாம் நடத்தி பொதுமக்களுக்கு அவரின் தியாகம் பற்றி சொல்லிக்கொண்டு
இருந்தோம். அங்கு பல இளம் தம்பிகள் கூடி இருந்தார்கள். மிக இரகசியமாக
நடக்கும் கூட்டங்களுக்கு நம்பிக்கையான மக்களை மட்டும் தான் எமது பகுதி நேர
போராளிகள் அழைத்து வருவார்கள்.
அங்கு ஒரு சிறுவன் பதின்னான்கு
வயதுதான் இருக்கும், தானும் இயக்கத்துக்கு வர ஆசைப் படுகின்றேன் என்றான்.
அவன் மென்மையான மெல்லிய குரல், புன்னகை, சுருண்ட முடி, அவனது பார்வை அதில்
ஒரு வெக்கம் அவன் மனதில் புதைத்து இருக்கும் வீரத்தை மிகவும் வேறு ஒரு
கோணத்தில் எனக்குக் காட்டியது. எனக்கு அவனை பார்க்கும் பொழுது மனதில்
ஒருவித பாசம் உருவாகியது. என் உடன்பிறந்த தம்பிகளின் ஞாபகம் வந்து போனது.
அவனது
தலையைத் தடவி “எத்தனாம் வகுப்பு படிக்கிறீங்க?” என்று கேட்டேன்.
“ஒன்பதாவது” என்றான். “பரதன் (மொரிஸ்) தனது இயற்பெயர்” என்றான் .
காவியங்கள் மனதில் வந்தன. அவன் பரதன் தான்… “தம்பி இப்போ படியுங்க, நாங்க கட்டாயம் உங்களை எடுப்போம். முதலில் உதவிகளை வீட்டில் இருந்து செய்யுங்கள். இயக்கம் எல்லோரையும் உடனே உள்ளுக்குள் எடுக்காது தெரியும்தானே. ஒழுக்கம் கட்டுப்பாடு நிறைய இருக்கணும். நாங்க உங்களைப் பார்ப்போம். சிலகாலம் உங்க செயல்பாடு எல்லாம் எப்படி இருக்கு என்று பார்போம்” என்று சொல்லி அனுப்பி விட்டேன். பாக்கியும், சஞ்ஜீவனும் அவனிடம் பேசினார்கள். பின் நாங்கள் அங்கிருந்து சென்று விட்டோம். பின் சிறிது காலம் நியாயவிலைக் கடைகள் தொடங்கி மக்களுக்கான சேவையை நாம் செய்து கொண்டு இருந்தோம் .
அப்பொழுது மீண்டும் அவன் வந்தான். “சரி பாடசாலை முடிந்து வந்து உதவிகள்
செய்யுங்கள்” என்று சொல்லி வைத்தோம். நியாயவிலைக் கடை ஒன்று தம்பசிட்டியில்
லேப்டின்ட் சங்கர் (தொண்டைமானறு வீரமரணம்), மேஜர் கேசரி (ஆனையிறவு)அவரின்
தம்பி, அவரின் நிர்வாகத்தில் வைத்து இருந்தோம். “அந்தக் கடையில் பகுதி
நேரமாக வந்து உதவிகள் செய்யுங்கோ” என்று சொன்னேன் . பரதன் (மொரிஸ்)
சங்கருடன் ஆத்தியடியில் கடையில் மிகவும் சிறப்பாக நிர்வாகம் செய்தான்.
தயாநிதி மாஸ்டரும் அங்கு சில உதவிகளைச் செய்தார். சங்கரும், கேசரியும்,
தயநிதி மாஸ்டரும், பரதனும் இன்னும் முரளி(சார்ல்ஸ், கணேஷ் எல்லோரும்
உறவுகள் போல், அது ஒரு நல்ல குழுவாக எங்கள் ஆலோசனைகளை செய்யல் படுத்தும்
குழுவாக செயல்பட்டார்கள். அப்படி சொல்லி ஒரு மாதத்துக்குள் அவனின்
செயல்பாடுகள் பிரமிக்க தக்கதாக இருந்தது. தனது நண்பர்கள் முரளி, கணேஷ்
ஆகியோரையும் எங்களுக்கு அறிமுகம் செய்து “அவர்களும் இருந்தால் இன்னும் ஒரு
கடையை சிறப்பாகச் செய்யலாம்” என்றான் அவன். சரி உனக்கு புதிதாக ஒரு கடை
தரலாம் என்று மாஸ்டரும் சொனார்.
சவனைப் பகுதியில் ஒரு இடத்தில் கடை
அமைத்துக் கொடுத்தோம். அப்படி படிப்படியாக அவன் போராட்ட வாழ்வு தொடங்கியது.
தபால்கார நண்பர் ஒருவரின் மிதி வண்டி ஒன்றை கடைக்குத் தேவையான பொருள்களை
கொண்டு வருவதற்கு பயன் படுத்தினான். பருத்தித்துறை வீதிகளில் கணேஷ் மிதிக்க
மொரிஸ் அந்த முன் கூடைக்குள் இருந்து செல்வது வேடிக்கையாக இருக்கும்.
பாடசாலை ஒன்பதாவது முடித்து பத்தாவது தொடங்கும் பொழுது அவன் “காவலுக்கு
தானும் செல்லவேண்டும்”(Centryக்கு) என்றான். அப்பொழுது சிங்கள இராணுவம்
முகாம்களுக்குள் முடக்கப்பட்டு அடிக்கடி சண்டை நடக்கும். அப்பொழுதெல்லாம்
கடையில் யாரையாவது விட்டு விட்டு களத்தில் வந்து நிற்பான்.
கடையில்
அவன் நண்பர்கள் எல்லோரும் வந்து நிற்பார்கள். ஒருநாள் எங்கோ ஒரு தவறு
நடந்து விட்டது. கடைக்கணக்கில் சில சிக்கல்கள். மொரிஸ்தான் கடைக்கு
பொறுப்பு. சூசை வந்து மொரிசிடம் சொல்லிவிட்டார் “இனி உனக்கு கடை சரிவராது”
என்று. “எல்லோரையும் கடையில் விட்டுப்போட்டு உன் பாட்டுக்கு நீ போனால்
இப்படித்தான் நடக்கும். நண்பர் என்றாலும் பொறுப்பு உன்னுடையது” என்று
கண்டிப்பாகச் சொல்லி விட்டார். “வீட்டுக்குப் போ. ஒருமாதம் இங்க வரகூடாது”
என்று. நான் சூசையிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். சூசை முடிவு
எடுத்தால் அண்ணன் சொன்னலும் மாற்றாது. அவ்வளவு உறுதியானவர். என்னாலும்
ஒன்றும் செய்ய முடியவில்லை. மொரிஸ் அழுதான். சிறு போராளி அவன். “சதா
அண்ணா, நான் பிழைவிட்டு இருப்பன் என்று நீங்க நினைகிறீங்களோ” என்று
கேட்கும் பொழுது எனக்கே கண் கலங்கியது .
“இது ஒரு பயிற்சி உனக்கு.
இயக்கம் அப்படித்தான். உன்னை ஒரு மாதம் வீட்டில் இரு என்றுதானே சூசை
சொன்னார். அதைச் செய்” என்று சொலிவிட்டு நான் கடைப் பொறுப்பை கணேஸிடம்
ஒப்படைத்தேன். ஆனால் மொரிஸ் எங்கள் எல்லோரையும் திணறடித்தான். உண்ணாவிரதம்
இருந்தான். முதல் நாள் நான் அவனுக்கு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன்.
கேட்கவில்லை. “நான் வீட்டுக்குப் போகப் போவதில்லை” என்று கடையின்
பின்பக்கம் ஒரு மூலையில் இருந்து கொண்டான். மூன்று நாள் அவன் ஏதும்
அருந்தவில்லை. சாப்பிடவில்லை. சோர்ந்து போய் இருந்தான். நிலைமையைச்
சூசைக்கு அறிவித்தேன். சூசை உடனடியாக வந்தார். அவனை அப்படியே தூக்கி, ஒரு
குழந்தையைப் போல அரவணைத்து, சாப்பிட வைத்தார். “சரி கடையை நடத்து” என்று
சொல்லிவிட்டுப் போய் விட்டார்.
பின் அண்ணனின் நேரடிப் பார்வையில்
ஒரு சிறப்புப்படை அணிக்கான பயிற்சிக்கு ஆட்கள் தெரிவு நடந்தது. அதில்
மொரிசும் இடம் பெற்றான். அதற்கான மனதிடம் அவனிடம் இருந்தது. அண்ணனின்
பாதுகாப்பு அணியில் சொர்ணத்தின் நிர்வாகத்தில் மொரிஸ் சாதனை படைத்தான்.
மொரிஸ்
சிங்கள இந்திய இராணுவத்துக்கு சிம்ம சொப்பனம். ரவி ராஜின் வீரமரணம் அவனை
வெகுவாகப் பாதித்து இருந்தது. பின்னாளில் மொரிசுடன் நின்று இறுதிக் களமாடிய
பெரியண்ணா என்னைச் சந்தித்து மொறிஸின், என் மீதான பாசத்தைச் சொன்ன பொழுது
நான் கண் கலங்கினேன். என் பார்வையில் வளர்ந்த பல போராளிகளில் மொரிஸின்
அந்தச் சிரித்த முகம் என் மனதில் இன்னும் நிலையாக இருக்கிறது.
இந்தத் தருணத்தில்
கப்டன் மொரிஸ்
மேஜர் கேசரி
லேப்டிநெட் சங்கர்
மேஜர் மலரவன் வேலன்
லேப்டிநெட் சிறி
கப்டன் நாதன்
லேப்டிநெட் இன்பன்
லெப்டினென்ட் காந்தன்
லேப்டிநெட் ரமணன்
லேப்டிநெட் முரளி
லேபதினெட் வெள்ளை
கப்டன் ரஞ்சன் சித்தப்பா
என்று ஆயிரம் ஆயிரம் போராளிகளை நினவு கூருகின்றேன்.
ஒவ்வோருவரும் ஒவ்வொரு காவியம் இன்னும் எழுதுவேன் என் ஆயுள் போதுமோ தெரியவில்லை!
– சதாவின் நாட்குறிப்பு
பிரபாகரன் மதிவதனி - போராட்டமே வாழ்க்கையாக
![]() |
| தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் மதிவதனி |
ஜெயவர்தனா இந்த உண்ணாவிரதத்தை கண்டு கொள்ளவில்லை லலித் அதுலத் முதலி அந்த மாணவர்கள் சாவதைப் பற்றி எந்த கவலையும் இல்லை என்றார். 15ம் தேதி உண்ணாவிரதம் ஆரம்பித்த ஆறாம் நாள் மாலை மாணவர்களை பரிசோதித்த மருத்துவர் ஒரு மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்று அறிவித்தார். அன்று இரவு விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மாணவர்களை உண்ணாவிரதப் பந்தலில் இருந்து அழைத்துச் சென்றனர். ப்ளாட் மாணவர்களை விடுதலைப் புலிகள் கடத்தியதாக குறை கூறியது, புலிகள் அமைப்பினர் இந்த மாணவர்கள் சாவதை நாங்கள் அனுமதிக்க இயலாது என்று மக்களிடம் துண்டறிக்கை மூலம் தகவல் தெரிவித்தனர்.
உண்ணாவிரதப் பந்தலில் இருந்து அழைத்து வரப்பட்ட மாணவர்கள் விடுதலைப்புலிகள் பாசறையில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு தமிழகத்திற்கு சென்றனர். மாணவிகள் ஜெயா, லலிதா, வினோஜா மற்றும் மதிவதனி உட்பட நான்கு பேரும் ஆண்டன் பாலசிங்கமும், அடேலும் தங்கியிருந்த சென்னை திருவான்மியூர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு தான் ஒரு ஹோலிப் பண்டிகையின் பொழுது பிரபாகரன் மீது கலர் நீரை ஊற்றி விளையாடினார் மதிவதனி, அதற்கு கடிந்து கொண்டார் பிரபாகரன். வருத்தம் அடைந்த மதிவதனி அழுது கொண்டிருந்தார், ஆண்டன் அண்ணையிடம் பேசிவிட்டு திரும்பி வந்த பிரபாகரன் அழுது கொண்டிருந்த மதிவதனியை சமாதானம் செய்துவிட்டு சென்றார். இதன் பிறகே இருவருக்கும் இடையிலான காதல் மலர்ந்தது, அன்றைய காலகட்டத்தில் புலிகள் இயக்கத்தினர் திருமணம் செய்ய தடை இருந்தது, அதை அனைத்து உறுப்பினர்களிடமும் பேசி அந்த தடையை நீக்கி திருமணத்திற்கு அனைவரின் சம்மதத்தையும் ஆண்டன் பாலசிங்கம் வாங்கினார். பிரபாகரன் மதிவதனியின் பெற்றோரின் சம்மதத்தையும் பெற்றபிறகு தான் திருமணம் என்று கூறியதால், யாழ்ப்பாணத்தில் இருந்து பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களின் சம்மதமும் பெறப்பட்டது.
மாப்பிள்ளை வீட்டில் இருந்து தான் தாலி செய்ய வேண்டும் என்பது முறை, எனவே பிரபாகரன் தனது மாமாவிற்கு தகவல் அனுப்பினார் அவரும் மிகவும் மகிழ்ந்து தாலி செய்து அனுப்பி வைத்தார். தாலிக்கு கூட தன் இயக்கத்தில் இருந்து பணம் பெறாமல் தன் மாமாவிடம் இருந்தே பணம் பெற்றார். இதே சமயத்தில் டெலோ பெண்களை தங்கள் இயக்கத்தில் இணைத்துக் கொள்கிறேன் என்று சொல்லி பலரை தமிழகத்திற்கு கூட்டி வந்தது, அவர்களுக்கு தங்கும் வசதியோ எதுவும் செய்யாமல் நிராதரவாக தமிழகத்தில் விட்டிருந்தது. அவர்களும் ஆண்டன் பாலசிங்கம் வீட்டிலேயே மதிவதனியுடன் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுள் ஒருவர் தான் சோத்தியா என்று அழைக்கப்பட்ட மாவீர்ர் சோத்தியா. இதன் பிறகே இவர்களுக்கான பயிற்சி பாசறை அமைக்கப்பட்டு பெண் விடுதலைப் புலிகள் அணி உருவாக்கப்பட்டது.
அண்ணியார் மதிவதனியின் முதல் களம் !
1983 இல் இலங்கை தீவின் சிங்களப் பகுதிகளில் நடந்த இனக்கலவரத்தில் உயிர் உடமை இழப்புடன் எல்லா வகையான பாதிப்புபாதிப்புகளாலும் தமிழர்கள் பாதிக்கப் பட்டு ஈழத்தின் பகுதிகளுக்குத் திரும்பி இருந்தார்கள். இவர்களில் சிங்கள பகுதிகளில் தொழில் புரியும் தமிழர்களும், தெற்கில் உள்ள பல்கலை கழகங்களில் பயிலும் தமிழ் மாணவர்களும் மீண்டும் சிங்கள பகுதிகளுக்கே செல்லும் இக்கட்டான நெருக்கடிக்குள் சிக்கி கொண்டார்கள் .
தெற்கு பல்கலைகழக தமிழ் மாணவர்களுக்கு தெற்கில் பாதுகாப்பு இல்லை , ஆகவே வடக்கில் யாழ் பல்கலைகழகத்திலேயே கல்வியை தொடரும் வசதிகளை செய்து தரவேண்டும் என்று தெற்கு பல்கலைகழக மாணவர்கள் சிங்கள அரசிடம் வேண்டுகோள் விடுத்தார்கள். அதற்கு சிங்கள அரசு செவி சாய்க்கவில்லை , மாணவர்கள் தொடர் போராட்டங்களில் இறங்கினார்கள்.
யாழ்பல்கலைக்கழக மாணவர்கள் பாடசாலை மாணவர்கள் பெற்றவர்கள் என்று எல்லோரும் களத்தில் இறங்கி போராடினார்கள். யாழ்பாண நகரம் போராட்டக் களமாக மாறியது .சிறப்பாக யாழ் பல்கலைகழகம் போராட்டத்தின் மத்திய களமாக மாறியிருந்தது . இராணுவ கெடுபிடிக்குள் சிக்கி இருந்த யாழ் குடாநாடு அன்று பெரும்பதட்டமாகவே காட்சி தரும் .
தெற்கில் இருந்து உயிர் பிளைத்து வந்த நாங்கள் மீண்டும் அங்கு செல்வது சாவைதேடி மீண்டும் செல்வதற்கு நிகரானது என்று தெற்கு பல்கலைகழக தமிழ் மாணவர்கள் சாகும்வரை உண்ணா விரத போராட்டத்தில் இறங்குவதாக தீர்மானித்தர்கள். அன்று சாகும் வரை போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்களுள் மதிவதனி அண்ணியும் இருந்தார்கள். அன்று அவர்கள் அண்ணனை சந்தித்து இருக்கவே இல்லை . ஒரு பல்கலை கழக மாணவியாக அவரும் அந்த போராட்டததில் கலந்துகொண்டார் ,நானும் அங்கு அவர்களுடன் உண்ணாவிரத போராட்டத்தில் இணைந்துகொண்டேன் . முதல் மூன்று நாட்கள் மட்டுமே நான் அந்த போராட்ட அமைவிடத்தில் தொடர்ச்சியாக அமர்ந்து தொடர்ந்து போராடும் ஒன்பது மாணவர்களுக்கு ஆதரவாக இருந்தேன் . பேராதனை கட்டுபத்து பல்கலைகழகத்தை சேர்ந்த ஒன்பது மாணவர்களே சாகும் வரை போராடுவது என்று முடிவெடுத்து போராடினார்கள் . அதில் மதிவதனி அண்ணியாரும் ஒருவர் .
நாங்கள் யாழ்பல்கலை கழக மாணவர்கள், தெற்கு பல்கலைகழக தமிழ் மாணவர்களுக்கு ஆதரவுக்காக மூன்று நாட்கள் முறை சுழற்சியாக அமர்ந்து இருந்தோம். முதல் மூன்று நாள் போராட்டத்தின் முதல் நாள் மாலை ஆரம்பம் ஆகியது . இரவு ஓய்வுக்காக போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்ளுக்கு ஒரு விரிப்புடன் ஒரு தலையணையும் வழங்கபட்டது , என்னிடம் ஒருவிரிப்பை புன்முகத்துடன் ஒருமாணவி நீட்டினார் . அவர்தான் அண்ணியார் . அன்று எங்கள் அறிமுகம் சாதரமான ஒரு பல்கலைகழக மாணவனாக சக மாணவியாக அவரை சந்தித்த பொழுது, இவர்தான் தமிழர் வரலாற்றில், இன்னும் சில ஆண்டுகளில் பெரும் நாயகியாக வரபோகின்றார் என்று நான் மட்டுமன்றி அங்கு இருந்த எவருக்கும் அதை அறிந்து இருக்க வாய்ப்பு இருந்திருக்கவில்லை. அந்த மூன்று நாட்கள் அந்தமண்டபத்துள் இருந்த மாணவர்கள் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்துகொண்டு பலவிடையங்களை பேசினோம் .
நாங்கள் யாழ் பல்கலை கழகத்தின் மறுமலர்ச்சி கழகம் என்ற அமைப்பில் அங்கத்துவராக இருந்து விடுதலை போராட்ட கருத்துக்களை அது தொடர்பான நூல்களை சேகரித்து மாணவர்களுக்கு கொடுப்பதுடன் ஒரு சஞ்சிகை வெளியிட்டு மக்களுக்கும் சரியான வழிகாட்டலை செய்துகொண்டு இருந்தோம். அன்று போராட்டத்துள் மிகப்பெரிய சிக்கல்கள் இருந்தது. ஏறக்குறைய 40 இயக்கங்கள் இருந்தன .மக்களுக்குள் பெரும் குழப்பம். யார் எதில் உள்ளார்கள் என்று தெரியவில்லை . அனால் மக்கள் மனதில் பெரிசு என்று ஒரு பெயரில் பிரபாகரன் , தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெரும் நம்பிக்கை வளர்ந்துகொண்டு இருந்தது. அந்தபத்திரிகையில் நான் அன்று ஒரு கட்டுரை எழுதியிருந்தேன் . எல்சல்வடோர் போராட்டத்தில் கியுப விடுதலையில் வியட்நாமிய விடுதலையில் செம்படையில், ரசியாவில் பெண்கெரில்லா போராளிகள் பங்களிப்பு பற்றி. அது பற்றிய ஒரு கருத்து பரிமாற்றத்தில் அண்ணியார் மதிவதனியுடன் சில உரையாடல்கள் செய்த பெரும்பாக்கியம் எனக்கு கிடைத்து .
சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் நிலையிலும் உண்ணாவிரதம் இருக்கும் சக மாணவர்களுக்கு வேண்டிய ஒழுங்குகளை முதல் ஆரம்பநாட்களில் மிகவும் உற்சாகமாக. செய்யும் எந்த பணியிலும் அண்ணியார் உற்சாகமாக பணியாற்றினார் . இன்னும் மனதில் உள்ள நினைவுகள் . அன்று வெப்பம் அதிகமாக இருந்தது, மின்விசிறிகளை மாணவர்கள் வீடுகளில் இருந்து கொண்டு வந்தார்கள் . அவற்றை சரியாக எல்லா இடத்திலும் வைக்கும் வேளைகளில் அண்ணியாரும் சுறுசுறுப்பாக இயங்கிகொண்டு இருந்தார் . ஏற்கனவே மூன்று வேளை உணவு உண்ணாமல் இருந்த நிலையில், அந்த களைப்பு தெரியாமல் எலோரிடமும் ஒரு தாயின் பரிவுடன் , அந்த அகண்ட விழிகள் பிரகாசமாக பேசிக்கொண்டு இருந்தது . ஒரு புன்முறுவல், வெடுக்கென்று திரும்பும் சுறுசுறுப்பு, மூன்று நாட்களில் உணவு அருந்த நிலையிலும் எவ்வளவுக்கு அதிகமாக சுருசுருபாக ஒருவரால் இயங்கி மற்றவர்களை சோர்வடையவிடாமல் அன்பு காட்ட முடியும் என்பதை அவர் காட்டிக்கொண்டு இருந்தார் .
ஒருபோராட்டத்தை மிகவும் கவனமாக கையாளும் ஒரு ஆளுமை மிக்க பெண்மணியாக அவர் இருந்தார் ,அந்த இயற்கையான சுபாபமே அவரை அங்கிருந்த எல்லோருக்குள்ளும் அவரை ஒரு மாணவ போராட்ட தலைவியாக ஏற்றுகொள்ள வழிசெய்தது . பிற்காலத்தில் அண்ணனும் அவரை தன துணைவியாராக தேர்ந்தெடுக்க முக்கிய காரணமாக, அண்ணியாரின் இந்த சிறப்பு தன்மைகளே காரணமாக இருந்திருக்கும் என்று நான் ஊகித்துக்கொண்டேன் .
மூன்று நாட்களில் நான் அண்ணியாருடன் பெசிய பொழுதிலெல்லாம் அவரை மதி என்று பெயர்சொல்லியே அழைத்திருந்தேன் , அந்தமாபெரும் மனிசி இன்று எங்கள் வரலாற்றின் மிகப்பெரிய தலைவியாக இருக்கின்றார் என்னும் பொழுது . சிவனும் உமையும் எனக்கு அருள் தந்தார்கள் என்று முன்னவர்கள் கூறிய அதே ஆனந்தம் எனக்குள்ளும் உள்ளது . என்வாழ்வில் நான் அடைந்த மிகப்பெரிய கொடைகளில் , அண்ணனுனுடன் முதல் ஆரம்பகாலத்தில் செயலாற்றியது , அதனை தொடர்ந்து அண்ணியாரை அவரது முதல் களத்தில் சந்தித்து அவருடன் களத்தில் அவரது வழிநடத்தலில் நின்று அவருடன் அவரது முதல் களத்தில் போராடியது .இந்த கொடுப்பனவு உலகில் யார் யாருக்கெல்லாம் கிடைத்ததோ தெரியாது , நிற்சயம் என்க்கொருவனுக்கே உண்டு என்ற பெருமையும் எனக்குள் உண்டு.
இந்த வரலாறு எனக்குள் ஏன் இப்படி உள்வந்த்து என்று எனக்கு தெரியவில்லை . அதுவே என்னை இன்றுவரை தொடர்ச்சியாக இனத்தின் விடுதலைக்காக இலைமறை கனியாக இரு என்கின்றது . இராவணன் பிறந்த மண்ணில் பிறந்தேன். பிரபாகரனுடன் ஆரம்பத்தில் இணைந்தேன், அண்ணியாரின் முதல் போராட்டத்தில் அவருடன் துணை நின்றேன். தென்கையிலையில் பிறக்க முத்தி என்பார்கள் பிறந்தேன் . அதனிலும் பெரிய வரம் வாங்கியவன் நான் என்றே எனக்குள் என்னை நான் ஒழுங்குபடுத்துகின்றேன் . இது தற்புகழ்ச்சியாக இருக்கலாம் இருந்தாலும் என் வாழ்வின் பெரும் பயன் அது . என் வாழ்வை ஒழுங்குபடுத்தும் சக்தி அது .
போராட்டம் ஏழாவது நாளை நெருங்கியது மாணவர்கள் ஒன்பதுபேரும் சோர்வாக இருந்தார்கள் . சிங்கள அரசு பல்கலை கழகத்துள் புகுந்து உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களை கைது செய்து சிறையில் அடைக்க முயற்சி செய்தது . நிலை மிக சிக்கலாக மாறியது . மாணவர்களை பாதுகாக்கும் பொறுப்பு முக்கியமானதாக இருந்தது , போராடும் மாணவர்களை சிங்கள அரசு கைது செய்வதை தடுக்கவேண்டும். அற்கு ஒரே வழி தமிழீழ விடுதலைக்குள் மாணவர்கள் உள்வாங்க படவேண்டும் . அதற்கு அன்று பல்கலைகழக மாணவர்கள் தயாராக இருந்தார்கள் , அவர்கள் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனையே தேர்ந்தெடுத்தமை தேசியத்தலைவரின் வழிகாட்டலில் விடுதலைப்புலிகள் மக்கள் மீது கொண்டிருந்த அன்பும் , மக்கள் விடுதலைப்புலிகள் மீது கொண்டிருந்த நம்பிக்கையுமே.
எட்டாம் நாள் இராணுவம் யாழ் பல்கலை கழகத்துள் அத்துமீறி நுழையும் என்று இருந்தது . மாணவர்கள் பாதுகாப்பு அரணாக நின்று போராடுவததாக இருந்தது . இராணுவம் துப்பாக்கி பிரயோகம் செய்யும் , பல உயிர்களை இழக்க வேண்டிய நிலை தோன்றும் . எழாம் நாள் உடனடியாக முடிவுகள் எடுக்கபட்டன, அன்று இரவே மாணவர்களை பாதுகாப்பாக வேறு இடத்துக்கு அழைத்து செல்வது என்று தீர்மானிக்கபட்டது . இராணுவ கெடுபிடிக்குள் விடுதலைபுலிகளின் படை பிரிவின் பாதுகாப்புடன் மாணவர்கள் தமிழ்நாட்டுக்கு அழைத்து செல்லபட்டார்கள் ………
- சதாவின் நாட்குறிப்பு
Saturday, June 22, 2024
லெப்டினன்ட் சீலன் (ஆசீர்)
![]() |
லெப்டினன்ட் சீலன் (ஆசீர்) |
“அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்…. இதோ இந்த அலைகள் போல…….”
1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி.
மாலை 3 மணி.
கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று.
அந்த மீசாலைக் கிராமம்
அமைதியில் தோய்ந்து போயிருக்கிறது.
அந்த அமைதியைக் குலைத்துக் கொண்டு, சிறிலங்காவின் இராணுவக் கூலிப்படைகள், அந்தச் சிறிய கிராமத்தைச் சுற்றிவளைக்கின்றன. கச்சாய் வீதியுடன் இணையும் அல்லாரை மீசாலை வீதியை, அரச படைகளின் வாகனங்கள் ஆக்கிரமிக்கின்றன.
ஒரு மினி பஸ், இரண்டு ஜீப், ஒரு இராணுவ ட்ரக் வண்டி. நொஈஉ பேருக்கு மேல் சிவிலுடையணிந்த சிங்கள இராணுவ அதிராடிப் படையினர். அந்தக் கிராமம் சிலிர்த்துக் கொள்கிறது.
கல்லும் மணலும் கலந்த குச்சு ஒழுங்கைகளுக்கூடாகா, நான்கு இளைஞர்கள் இயந்திரத் துப்பாக்கிகளுடன் சைக்கிளில் விரைந்து கொண்டிருந்தனர்.
ஒரு துரோகி காட்டிக் கொடுத்தால் சிங்கள இராணுவம் தங்களது மறைவிடத்தைச் சுற்றிவளைப்பதை உணர்ந்து, அந்த கிராமத்தை விட்டு வெளியேற விரையும் அந்த நான்கு இளைஞர்களும், அதோ அந்த அல்லாரை மீசாலைத் தார் வீதியைக் கடந்து கொண்டிருக்கிறார்கள்.
வீதியின் ஒரு புறம் சுடலையருகேயும் மறுபுறம் நெசவுநிலையத்திற்கருகிலும் நின்று கொண்டிருந்த இராணுவ வண்டிகள் இளைஞர்கள் கடந்த ஸ்தலத்தை நோக்கிச் சடுதியாக விரைகின்றன அந்த ஸ்தலத்தில் இராணுவ வண்டிகள் குலுங்கிக்கொண்டு நிற்கின்றன.
இராணுவத்தின் குண்டு துளைக்கும் எல்லைக்குள் அந்த இளைஞர்கள் விரைந்து கொண்டிருக்குறார்கள். மினிபஸ்ஸில் இருந்த இராணுவத்தினர் இறங்கி ஓடிப் பனை வடலிக்குள் பாதுகாப்பான இடங்களில் தங்களை நிலைப்படுத்திக் கொள்கின்றனர். மொத்த இராணுவத்தினரில் முப்பதுக்கு மேற்ப்பட்டோர் பனை வடலிக்குள் குழுமுகின்றனர்.
தார் வீதியைக் கடந்த இளைஞர்கள் துரதிர்ஸ்டவசமாக இப்போது நின்று கொண்டிருப்பது, வெறும் பொட்டல் வெளியில். சுற்றிலும் சூழ்ந்து கொண்டுவிட்ட அரச படைகளை உறுத்துப் பார்கிறான், அந்த இளைஞர்களின் தலைவன்.
அவன் தான் –
சீலன் !
அரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்.
ஆசீர் –
சீலன் –
இதயச்சந்திரன் –
ஆகிய பெயர்களில் அரச படைகள் வெறிகொண்டு தேடும், லூக்காஸ் சார்ல்ஸ் அன்ரனி தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவப் பிரிவுத் தலைவன்.
Fire !
“சுடுங்கள்”
கட்டளை பிறப்பித்த சீலனின் இயந்திரத் துப்பாக்கி சடசடக்கிறது மற்ற இளைஞர்களும் விரைந்து துப்பாக்கிகளை இயக்குகின்றனர்.
வெட்டவெளியில் அந்த வீரமகன் சீலன். அவனுக்கருகில் ஆனந்த் என்னும் அருள் நாதன். உடலும் உள்ளமும் வைரம் பாய்ந்தவன். அவனோடு இன்னுமொரு வீரன்.
ஆபத்தின் எல்லைக்கப்பால் அடுத்த வீரன் உறுதி, நிதானம், வேகம், லாவகம் களத்திலே புலிகள்.
இளைஞர்களின் எதிர்த்தாக்குதல் சிங்களக் கூலிபடைகளைத் திணறச் செய்கிறது. ஆனாலும் பாதுகாப்பான பனை வடலிக்குள் பதுங்கிக் கொண்டு அந்தக் கூலிகளும் தொடர்ச்சியாகத் தாக்கிகின்றனர்.
வெட்டவெளியில் தொடர்ந்து முன்னேறவோ, பின்வாங்கவோ முடியாத இக்கட்டான நிலையில் அவர்கள் சிக்கிக்கொண்டு விட்டனர்…
ஆனாலும் ஆயுதங்களோடு அரச படைகளின் கையில் சரணடையும் கோழைகளல்ல இவர்கள் ! பிரபாகரனின் கைகளிலே வளர்ந்தவர்கள். எதிரிகளின் கைகளில் பிடிபடுவதை விட மானத்தோடு சாவது மேல், என்ற வீர மரபில் பயிற்றப்பட்டவர்கள்.
இறுதி மூச்சி வரை இந்தப் புலிகள் போராடத் திடங்கொண்டனர்.
சுற்றிலும் குவிந்து நிற்கும் கூலிப்பட்டாளம்! வெளியைத் துளைக்கும் சன்னங்கள். மண் தரையில் புழுதி கிளப்பும் குண்டுகள். சீலனின் எந்திரத் துப்பாக்கி தொரர்ந்து சடசடக்கிறது.!
ஆனால் கூலிபடையின் துப்பாக்கிச் சன்னம் ஏற்கனவே பெற்றிருந்த சீலனின் வீரத்தழும்புகளைக் கிழித்துக்கொண்டு மார்பில் பாய்கிறது. ரத்தம் பீறிடச் சீலன் தள்ளாடுகிறான்.
இரண்டு முறை முன்னரே களத்தில் குருதி சிந்திய அந்த வீரன், தன்னுயிர் போகவில்லை என்பதை உணர்கிறான்.
உயிரோடு அகப்பட்டால் கடித்துக் குதரக் காத்திருக்கும் வேட்டை நாய்கள்
சுற்றிலும் ! “என்னைச் சுட்டுக் கொன்றுவிட்டு நீங்கள் பின் வாங்குங்கள்”
என்று, சீலன்
கட்டளையிடுகிறான்.
படைத்தலைவனின் கட்டளை. பணிக்கப்பட்ட இளம் வீரனோ திகைத்துப்போய் நிற்கிறான்.
பனை வடலிக்குள் வசதியாகப் பதுங்கி நிற்கும் இராணுவ வேட்டை நாய்களின் தொடர் வேட்டு மழை.
சீலனின் கட்டளையை நிறைவேற்றுவதா?
ஒரு பாசம் மிக்க தோழனின், ஒரு வீரம் மிக்க போராளியின் மரணம் தன்னால் நிகழ்வதா? அல்லது அவனை உயிருடன் எதிரியின் கையில் பிடிபட விட்டுவிட்டுத் தான் பின்வாங்குவதா? வினாடி நேரத்தில் விடை காணவேண்டிய நிர்ப்பந்தம் அந்த வீரனுக்கு.
“என்னைச் சுட்டா சுடு” – சீலனின் கண்டிப்புடன் கூடிய கட்டளை மீண்டும் பிறக்கிறது.
நெஞ்சில் வழியும் ரத்தம்;
முகத்தில் துளிர்க்கும் வியர்வை.
சீலன் தல்லாயவாறு கண்டிப்புடன் மீண்டும் கட்டளையிடுகிறான்.
லட்சியத் தணலிலே புடம் போட்ட அந்த வீரனின் நெஞ்சில், உறுதி பிறக்கிறது.
காண நேரத்திற்குள் சீலனின் தலையில் துப்பாக்கிச் சன்னங்கள் பாய்கிறன. புரட்சி வீரன் சீலனின் உடலை மீசாலை மண் அணைத்துப் பெருமை தேடிக்கொள்கிறது.
அதற்குள், குறி பார்த்துச் சுடுவதற்கு வாகன – வாட்ட சாட்டமான தோற்றம் கொண்ட ஆனந்த் குண்டு பட்டுச் சாய்கிறான். ஆனந்த் உயர்ந்தவன் – உயரத்தில், தன்மானத்தில், வீரத்தில்.
“என்னையும் சுட்டு விடு” – ஆனந்தின் வேண்டுகோள்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தூய்மைக்கு முத்திரை பாதிக்கும் ரத்தச் சாட்சிகள்.
பிரபாகரனின் பயிற்சிக் களத்திலே வளர்ந்த வேங்கைகள்.
ஆனந்தின் தன்மானம் காக்கிறான் அந்த இளம் வீரன். மீசாலை மண்ணின் இரண்டு மாணிக்கங்கள் தரையில் சரிந்தும் இராணுவக் கூலிப்படை கும்மாளமிட்டது. வீழ்ந்துபட்ட வீரர்களின் துப்பாக்கிகளையும் ஏந்திக்கொண்டு, மற்றுமிரு வீரர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.
இறந்து கிடப்பவர்கள் யார்?
இராணுவ மிருகங்கள் நெற்றியைச் சுழிக்கின்றன. தங்களின் கைவசமுள்ள ‘தேடப்படுபவர்களின்’ புகைப்படக் குவியலில் இவர்களின் புகைப்படங்கள் இல்லையே!
அந்தக் கூலிப்படையின் மேஜர் ஒருவன் சீலனின் சாரத்தை உயர்த்தி, வலது காலைப் பார்க்கிறான். வலது காலின் முழங்கால் மூட்டுக்கு மேற்பகுதியில் ஐந்து துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்த தழும்புகள்.
அந்த மேஜர் உரத்துக் கத்துகிறான்: “இவன்தான் சீலன்!”
சீலன் இருபத்து மூன்று வயது கூட நிரம்பாத இளைஞன், அழகான முகம், அழகாய்ச் சிரிப்பான். அவனுடைய பேச்சிலே மழலை சொட்டும்.
பலகுவதிலே அவன் குழந்தை. யாரையும் கவர்ந்திழுக்கும் வசீகரம் அவனுடையது.
ஓரத்தில் உதட்டைக் கடித்துக் கொண்டு, கண்களைச் சுருக்கிக் கொண்டு அவன் சிரிக்கும் அழகு அவனுக்கேயுரியது.
இவனோட பழகக் கிடைத்தவர்கள் அதிஸ்டசாலிகள், தான் மட்டுமல்ல தன்னோடு இருப்பவர்களையும் எப்போதும் சிரிக்கவைத்துக் கொண்டிருப்பான்.
கூச்ச சுபாவம் உள்ளவன். ஆனால் பழக ஆரம்பித்தால் மிகவும் இனிமையாகப் பழகுவான். அன்பு செலுத்தத் தெரிந்த இவன் அன்பைப் பிரியமாக ஏற்றுக் கொள்வான்.
பிரியமானவர்கள் விளையாட்டுக்காகக் கோபித்தால் கூட அதனை அவனால் தாங்கிக்கொள்ள முடியாது. போலித்தனம் இவனுக்குத் தெரியாது. ஆர்ப்பாட்டமே இல்லாதவன்.
ஆயுதப்படைகளுக்கு எதிரான அதிரடித்தாக்குதலென்றால் யுத்த சன்னதனாகக்களத்தில் குதிக்கும் இவன், சாதாரணப் பொழுதுகளில் தென்றலாகத் தெரிவான்.
அவன் ஆத்மாவை விற்கத் தெரியாத புரட்சிக்காரன்.
பிழைகளைச் சுட்டிக் காட்டுவதில் நக்கீரன். தமிழீழத்தை நோக்கிய அவனது சிந்தனைகளும் செயற்பாடுகளும் திட்டவட்டமானவை.
தலைவர் பிரபாகரனின் தலைமையில், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் விடுதலைப் போராட்டத்திலேயே தமிழீழம் வெல்லப்படும் என்பதில், சீலன் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தான்.
பிரபாகரனின் நேர்மையிலும் தூய்மையிலும், திறமையிலும் அவன் எல்லையற்ற மதிப்பு வைத்திருந்தான்.
தேசிய விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் பணியில், ஒரு தலைமறைவு இயக்கத்தின் ஒழுங்கு கட்டுப்பாடு என்பவற்றைப் பேணுவதில் சீலன் காட்டிய சிரத்தை, அசாதாராணமானது.
அந்த அவகியில் தலைவர் பிரபாகரனின் பூரண நம்பிக்கைக்கும், அன்பிற்கும் சீலன் பாத்திரமாக இருந்தான். ஒழுங்கும் கட்டுப்பாடும் இல்லாத சுயநலமிகளும், கூட இருந்தே இயக்கத்திற்குக் குழிபறித்து விட்டு ஓடிய தொரோகிகளும், பிளவுவாத நடவடிக்கையில் ஈடுபட்டு தூய்மையான இயக்கத்தை உடைக்க முயன்றபோது, இயக்கத்தின் கட்டுக்கோப்பைத் தளரவிடாது காப்பதில் பிரபாகரனுடன் உறுதியாக நின்றவர்களில், சீலன் முதன்மையானவன்.
பதவி இறக்கப்பட்டதற்க்காக இயக்கத்தை விட்டு ஓடியவர்களைப் பார்த்து சீலன் சிரித்திருக்கிறன. அந்தச் சிரிப்பில் சினமும் தோய்ந்திருக்கும். இயக்கத்தின் ரத்த நாளமாகவே சீலன் திகழ்ந்தான். தான் நம்பியவர்கள் எல்லோரும் பதவிப் பித்தர்களாயும், சுயனலமிகளாயும் வேடங்கட்டித் திரிந்ததைப் பார்த்து பிரபாகரன் விரக்தி கொண்ட கணங்களில், சீலனே இயக்கத்திற்குப் புதிய ரத்தம் பாய்ச்சுவதில் துணை நின்று பெரும் பணியாற்ரியிருக்கிறான்.
சீலன் இராணுவப் படிப்புப் படித்தவன் அல்லான். வெளிநாடுகளில் போர்ப்பயிற்சி பெற்றவனுமல்லன். போர் மூலமாகவே போரை அறிந்தவன். இயக்கத்தின் இராணுவப் பிரிவுத் தலைமை வகித்து இவன் நடத்திய வெற்றிகரமான கெரில்லாத் தாக்குதல்கள், இயக்கத்திற்கு வலிமையைச் சேர்த்து, விடுதலைப் போராட்டத்தையும் முன்னேடுத்ததையும் முன்னெடுத்துச் சென்றிருக்கிறது.
தமிழீழத்தின் போராட்ட வராலாற்றில் முதன்மைவாய்ந்த கெரில்லா வீரன் சீலன். படைத் தலைவன் என்பவன் ஆணை பிறப்பிப்பவன் மட்டுமல்ல தானே முன்னுதாரணமாகத் திகழ்ந்து போரை வழி நடத்துபவன் என்பதற்கு, சீலனே ஒரு இலக்கணம்.
ஒரு கெரில்லாத் தாக்குதலை மேற்கொள்ளுமுன் அதற்கான தகவல்களைத் திரட்டுவதிலும், அதன் செயற்பாடு, விளைவு, தாக்கம் என்பதனை ஆராய்வதிலும், அவன் கடுமையாக உழைத்தவன். கவனப்பிசகால் எந்தவிதமான தீங்கும் ஏற்பட்டுவடாது பார்த்துக் கொள்வதிலும் அவன் மிகவும் விழிப்புடன் இருப்பான். அசாத்தியமான துணிச்சலும், எதிரிகளின் பலவீனங்களை ஆராய்ந்து அதற்கேற்ப திட்டங்களை வகுக்கும் நுண்ணிய அறிவுமே, குறுகிய காலத்தில் இராணுவப் பிரிவின் தலைவனாக அவனைப் பதவிவகிக்கும் நிலைக்கு உயர்த்தியது.
“ஒரு கெரிலாப் போராளியின் வீரம் அவனது எந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில்தான் இருக்கிறது” என்பது, சீலனின் அனுபவ வாசகம்.
அவனது மனவலிமை அபாரமானது. சாவுக்கு அவன் வாழ்க்கை ஒரு சவால்.
துப்பாக்கிப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கும் போது முதன்முறை நெஞ்சிலே குண்டு பாய்ந்தது. ரத்தம் பீரியடிக்க விழுந்து கிடாந்த நிலையிலும் கூட…
அந்த வீரனின் முகத்தின் புசிரிப்பு மிளிர்ந்ததை இயக்கத் தோழர்கள் என்றும் நினைவு கூர்வர்.
மூச்சு விடவும் திராணியற்ருப்போன நிலையிலும் அவன் திணறித் திணறித் சொன்ன வார்த்தைகள்;
“இயக்கத்தைக் காட்டிக் கொடுத்திடாதீங்க”
பிறகும் பேசுவதற்கு மூச்சு இடந்தந்த போது அவன் சொன்னான்;
“இயந்திரத் துப்பாக்கியைக் கொண்டு பொய் பாதுகாப்பான இடத்தில் வையுங்கள்”
மரண அவஸ்தையிலும் அந்த மாவீரன், இயக்கம் குறித்து மட்டுமே உதிர்த்த வார்த்தைகள் கண்ணீரோடு மட்டுமல்ல பெருமிதத்தோடும் நினைவுகூறத்தக்கவை. உணமைதான்.
சாவுக்குச் சவால் விட்ட அந்த விடுதலை வீரனை இறுதியில் சாவு அணைத்த போது, அவன் இயக்கத்தைக் காட்டிக் கொடுத்திடவும் இல்லை இயந்திரத் துப்பாக்கியைப் பாதுகாப்பான இடத்தில் விட்டுவைக்கவும் தவறவில்லை.
சீலன் திருமலையின் வீர மண்ணிலே விளைந்த நல்ல முத்து. சிங்கள இனவெறியாட்சியாளர்களின் நேரடியான ஒடுக்குமுறைக்குள் சிக்குண்டு கிடந்த திருகொனமையின் நடைமுறை அனுபவங்களை அவன் கண் கூடாகக் கண்டவன்.
சிறீலங்காவின் திட்ட மிட்ட சிங்கள குடியேற்றங்களும் கடற்படை, விமானப்படையின் அடக்குமுறைகளும் சிங்களக்காடையர்கள், இராணுவம், போலிஸ் ஆகியோரின் அரவணைப்புடன் தமிழ் மக்களைத் துன்புறுத்தும் கொடுமைகளும் திருமலையில் ஏராளம். இந்த ஆக்கிரமிப்பிற்கு இடங்கொடுத்து வந்தால்தான், திருமலை மண்ணையே சிங்களவர்களுக்குப் பறிகொடுக்கும் நிலை வந்தது என்று சீலன் கொதிப்பான்.
கல்லூரி நாட்களிலேயே இனவெரிபிடித்து சிங்கள் ஆளும்வர்க்கத்திர்க்க்ர்தினான போறான்ன உணர்வு கண்டவனாகச் சீலன் திகழ்ந்தான்.
1978ம் ஆண்டு ஆவணி மாதம் கொண்டுவரப்பட்ட சிறீலங்கா ஐனநாயக சோஷலிசக் குடியரசின் அரசியல் சாசனத்தின் அடிப்படையில், ஜே.ஆர். ஜெயவர்த்தனா ஐநாதிபதியாகப் பதவியேற்கும் வைபவத்தினைத் தமிழீழ மண்ணில் அமர்க்களமாகக் கொண்டாட அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை அம்பலப்படுத்த, பாடசாலை மாணவனான சீலன் முன்வந்தான். இந்த வைபவத்தினையோட்டித் திருமலை இந்துக் கலூரியில் சிறீலங்காவின் தேசியக் கொடியை ஏற்றிவைக்க ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
சீலன் தனக்கேயுரியதான நுட்பமான அறிவைப் பயன்படுத்தி, ‘பொஸ்பரஸ்’ என்னும் இரசாயனத்தை அத்தேசியக்கொடிச் சுருளில் மறைத்து வைத்தான். தேசியக்கொடி ஏற்றப்பட்டபோது அது எரிந்து சாம்பலாகியது.
சந்தேகத்தின் பேரில் 18 வயது மாணவனான சீலன் கைது செய்யப்பட்டு, சிங்களக் கூலிப்படையால் சித்திரவதை செய்யப்பட்டான். அந்த வயதிலும் தனக்கு உடந்தையாக இருந்த எவரையும் அவன் காட்டிக் கொடுக்கவில்லை. கொள்கையிலே உறுதிக்கொண்டவர்களைச் சிறைச்சாலைகளும், சித்திரவதைகளும் என்ன செய்துவிடமுடியும்?
தனிமனிதரீதியிலான எதிர்ப்புணர்வால் அரச இயந்திரத்தை அழித்து விடமுடியாது என்ற அனுபவத்தையும், இவை சீலனுக்குப் போதித்தன. இந்த அனுபவமே சீலன் தண்ணி ஒரு புரட்சிகர இயக்கத்தில் இணைத்துக்கொள்ள, உந்துசக்தியாக உதவியது.
ஆயுதந்தாங்கிய அடக்குமுறையை ஆயுதப் போராட்டத்தின் மூலமே தகர்க்க முடியும் என்ற நம்பிக்கையே சீலனை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலே இணைத்தது ‘ஆயுதப் போராட்டம் மூலம் தமிழீழம்’ என்ற ராஜபாட்டையில் சீலன் கம்பீரமாகவே நடந்திருக்கிறான்.
இயக்கத்தில் சேர்வதற்கு முன் விட்டெறிந்து விட்டு வருவதற்கு வளமான வாழ்க்கையோ – கை நிறையக் காசு கிடைக்கும் தொழிலோ சீலனுக்கு இல்லை.
ஆனால் இவனையே நம்பி அன்றாடம் சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு வறிய குடும்பம் இருந்தது. வளமான வாழ்க்கையை அல்ல; வரியா குடும்பமொன்றின் எதிர்பார்க்கைகளை நிர்த்தாட்சண்யமாகத் தூக்கி வீசிவிட்டுவரும் பெரும் மனத்திடமும், இலட்சியப்பிடியும் சீலனிடம் இருந்ததன.
சாக்குப் படகுகளால் மறைக்கப்பட்ட சிறிய குச்சு வீடு; வேலையோ, நிரந்தரமான வருமானமோ இல்லாத தந்தை வீடுகளில் சமையல் வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றும் தாய்; இரண்டு அண்ணன்மார்; இரண்டு அக்காமார்; ஒரு தங்கை.
சீலன் உணவில்லாமலே வாடிய நாட்கள் ஏராளம்.
சிந்திக்கும் திறன் கொண்ட சீலன் தனது குடும்பம் மட்டுமல்ல, எத்தனையோ குடும்பங்கள் ஏழ்மை நிலையில் வாடுவதைக் கண்டு, நொந்திருக்கிறான்.
சீலனின் வாழ்நிலை புரட்சிகரச் சிந்தனைகளின் விளைநிலமானது. மார்க்ஸியச் சிந்தனையில் அவன் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டான். மார்க்ஸிய ஒளியில் தேசிய இனப் பிரச்சினையையை அவன் தெளிவாக விளங்கிக் கொண்டிருந்தான்.
உலகெங்கும் நடக்கும் விடுதலைப் போராட்டங்களை ஆர்வத்துடன் அவதானித்து வந்தான். பெண் விடுதலை பற்றிய இவனது அபிப்பிராயங்கள் சுயசிந்தனையின் பாற்பட்டதாகவும் வியக்கத்தக்க வகையில் முற்போக்கானதாகவும் இருந்தன.
இத்தகைய அரசியற் பிரக்ஞை கொண்ட சீலன் இராணுவப் பிரிவுத் தலைவநாத் திறனோடு செயற்ப்பட்ட காலம் குறித்து தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் பெருமிதம் கொள்கிறது.
குறுகிய காலத்தில் சீலன் சாதித்தவை மகத்தானவை.
1981 ஐப்பசி மாதம், பிரிகேடியர் வீரதுங்க சிறீலங்கா அரசால் பதவி உயர்வு பெற்று, இராணுவக் கொமானடராக நியமிக்கப்பட்டபோது, தமிழீழப் போராட்ட வரலாற்றில் முதல் தடவையாக சிறீலங்கா இராணுவக் கூலிப்படைக்கு எதிரான கெரில்லாத் தாக்குதலை வெற்றிகரமாகத் தொடங்கி, இரண்டு வீரர்களைச் சுட்டு விழ்த்திய பெருமை சீலனுக்குரியது.
1982 இல் ஐஅனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்காக யாழப்பனத்திர்க்கு ஜே.ஆர் ஜெயவர்த்தனா, விஜயம் செய்வதையொட்டி, காரைநகர் பொன்னாலைப் பாலத்தில் கடற்படை வீரர்களின் ட்ரக் வண்டிகளைச் சிதைக்கும் கெரில்லா நடைவடிக்கையும் சீலனின் தலைமையிலேயே நடந்தது. துரதிர்ஷ்டவசமாக சிறீலங்கா கடற்படைக்கூலிகள் இத்தாக்குதலிலிருந்து தப்பித்துக்கொண்டனராயினும்,இத்தாக்குதல் நடவடிக்கை சிறீலங்கா அரசை நடுக்கமுறச் செய்தது.
1982 ஐப்பசி 20ம் திகதி, பாசிஸ வெறியன் ஜே.ஆர் ஜெயவர்த்தனா, மீண்டும் தேர்தலில் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டான்.
பொலிஸ் நிலையத்திற்குச் சற்று தள்ளி ஒரு மினிபஸ் நிக்கிறது. மினி
பஸ்ஸில் இருந்து இராணுவ உடைதரித்த விடுதலைப் புலிகள், சீலனின் தலைமையில் உப
இயந்திரத் துப்பாக்கி (S.M.G), தானியங்கித் துப்பாக்கிகள் சகிதம்
மின்வெட்டும் வேகத்தில் பொலிஸ் நிலையத்தினை ஆக்கிரமிக்கின்றனர்.
எதிர்த்தாக்குதல் நடத்த முனைந்த இரண்டு பொலிஸ்காரர்கள் சுடப்பட்டனர். அந்த
அதிகாளியின் அமைதியைக் கிழித்துக்கொண்டு துப்பாக்கி வேட்டுக்கள்
தொடர்ச்சியாகத் தீர்க்கப்படுகின்றன. சார்ஜ் ரூம் சிதைக்கப்படுகிறது.
பயம் அறியாத – சாவறியாத சீலன் முன்னின்று மேற்கொண்ட தாக்குதலில் பொலிஸ் அதிரடிப்படியின் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்கானான் வலது காலின் முழங்கால் முட்டிற்குச் சற்று மேலே ஐந்து துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்தன.
பொலிஸ் நிலையக் கொம்பவண்டிற்குள் கொண்டுவரப்பட்ட மினிபஸ்ஸிற்குள் ஆயுதங்கள் அனைத்தும் துரிதமாக ஏற்றப்படுகிறன. காலைக் கெந்திக் கெந்தி இழுத்துக் கொண்டு தனது S.M.G யுடன் எதிரியின் துப்பாக்கியையும் இழுத்துக்கொண்டு மினிபஸ்ஸிற்கருகில் வந்து சக போராளிகளின் கைகளில் கொடுத்துவிட்டு, தள்ளாடுகிறான் சீலன், மயக்கமடைகிறான்.
இதற்க்கு ஐந்து மாதங்களுக்கு முன்புதான் துப்பாக்கிப் பயிற்சியின்போது நெஞ்சிலே குண்டு பாய்ந்தது, ஆஸ்பத்திரியில் சிகிட்சைபெற்று ஓரளவு உடல் தேறியிருந்த சீலனுக்கு, இது இரண்டாவது காயம்.
இந்தத் துப்பாக்கிக் காயம் சீலனை மிகவும் பலவீனப்படுத்தியது. காயம்பட்டுவிட்டால் சீலனை வைத்துப் பராமரிப்பது சிறிய கஷ்டம் தான்.
“நோவுது, நோவுது” என்று தொடர்ச்சியாய் முனகிக்கொண்டிருப்பான்.
முதலாவது காயத்தின்போது நோவைத் தணிப்பதற்காக ‘பெதற்றின்’ மருந்து
கொடுக்கப்பட்டு, சீலன் அதற்க்குக் கொஞ்சம் பழகிப்போனான். “எனக்குத் தாங்க
முடியாது பெதற்றின் தாங்கோ” என்று கெஞ்சும்போது, இந்த விடுதலைப்புலி ஒரு
குழந்தையாகும். ஓரிடத்தில் கிடைக்கமாட்டான். புரண்டு
புரண்டுகொண்டேயிருப்பான்.
ஒரு முறை, காயத்தின் நோவிலிருந்து மீள மன ஆறுதலுக்கு கடவுளை நினைத்துக் கொள் என்று சீலனிடம், வைத்தியசாலியில் அவனைக் கவனித்துக் கொண்ட நண்பன் சொன்னபோது, அவன் தீர்க்கமாக மறுத்து விட்டான்.
ஆனால் பின்பொருமுறை, தனது நெருக்கமான அரசியல் நண்பன் உணர்ச்சிச் சுழிப்பு பிரவகித் தோடியிருந்தது.
அவன் ஓரளவு குனமாகியிருந்தாலும் கெந்திக் கேந்தித்தன் நடப்பான். ஐந்து மாத இடைவெளியில், நெஞ்சிலும் காலிலுமாக அவன் வாங்கிய துப்பாக்கிக் குண்டுகளின் காயங்களில் இருந்து நலம்பெற்று, அவன் தன்னம்பிக்கையோடுதான் செயற்பட்டான்.
நெஞ்சிலே காயம்பட்டு சத்திர சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறும்போது, ஆஸ்பத்திரியில் நின்ற நாட்களில் அன்பாய் அவனைப் பார்த்துக் கொண்ட நேர்ஸ் அவனிடம் கேட்டாள்:
“நீங்கள் குணமானது உங்களின் தன்னம்பிகையினாலா? நண்பர்களினாலா? மருத்துவரினாலா? அல்லது கடவுளின் கிருபையினாலா?”
அந்த நேர்ஸ் என்ன பதிலை எதிர்பார்க்கிறாள் என்பது, சீலனுக்குத் தெரியும். விடைபெறுகின்ற நேரத்தில், அவள் எதிர்பார்க்கும் அந்தப் பதிலைச் சீலன் சொல்லிவைக்கலாமே என்று, பக்கத்தில் இருந்த நாண்பர்கள் மனதில் நினைத்துக்கொள்கின்றனர்.
அவளுடைய திருப்திக்காகத் தான் ஏற்றுகொள்ளாத ஒரு பதிலை சொல்ல, அவன் தயாராக இல்லை.
சிகிச்சை பெற்று ஐந்து மாதம் கூடத் தரிக்காமல் அவன் மீண்டும் தமிழீழத்தின் போராட்டக் களத்தில் இறங்கினான்.
1983 வைகாசி மாதம் 18ம் திகதி,
சிறீலங்கா அரசு நடாத்தும் உள்ளூராட்சித் தேர்தலுக்கான திகதி ஓட்டுப் பொறுக்கும் அரசியலில் ஊறிப்போன கட்சிகள் தேர்தலில் திளைத்தன. யாழ்.மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஐக்கிய தேசிய கட்சியும், தமிழ்க் காங்கிரஸ், நவசமசமாஜக் கட்சி ஆகியனவும் தீவிரத் தேர்தல் பிரசாரத்தில் இறங்கியிருந்தன.
யாழ். உள்ளூராட்சித் தேர்தலைப் பகிஷ்கரிக்கும் பணியில் இயக்கம் தீவிரமாகச் செயற்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் சர்ந்தப்பவாத சமரசத் தலைமைகளால் தமிழ் மக்களுக்கு விடிவேற்படாது என்பதை நன்குணர்ந்திருந்த சீலன், அவர்களை மக்களுக்கு இனம் காட்டுவதில் முன்னின்றான். இனவாத அரசின் தேர்தல் மாயையிலிருந்து தமிழீழ மக்கள் விடுபட வேண்டும் என்று, இயக்கம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தபோது, தேர்தல் பகிஸ்கரிப்பு பிரச்சார வேலைகளுக்காக இரவு பகலாக, அரசியல்ரீதியாகவும் இராணுவரீதியாகவும் சீலன் உற்சாகத்துடன் பணியாற்றினான். பாசிஸ இனவெறியன் ஜே.ஆரின் சார்பில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் இயங்கிய மூவர்மீது, சித்திரை 29ம் திகதி இயக்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் சீலன் தலைமையிலேயே மேற்கொள்ளப்பட்டன.
வைகாசி 18ம் திகதி, தேர்தல் நிலையங்களின் பாதுகாப்பு பந்தோபஸ்து கருதி சிறீலங்கா அரசு யாழ்.குடாநாடு முழுவதும் ஆயுதப்படைகளைக் குவித்தது. ஒவ்வொரு தேர்தல் வாக்களிப்பு நிலையத்திற்கும் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திற்கும் ஐந்து ஆயுதம் தாங்கிய பொலிசாரும் ஐந்து ஆயுதம் தாங்கிய இராணுவத்தினரும், பாதுகாப்பிற்காக உசார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
இதனை விட, ஒரு மணித்தியாலத்திற்கு ஒரு முறை பொலிசாரும் இராணுவத்தினரும் ரோந்துப் பார்த்துக் கொண்டிருந்த வண்ணமாக இருந்தனர்.
வைகாசி 18ம் திகதி மாலை 4.15 மணி.
கந்தர்மடம் சைவப்பிரகாச மகாவித்தியாலத்தின் வாக்களிப்பு நிலையத்திற்கருகில், மூன்று சைக்கிள்களில் இளைஞர்கள் வந்திருந்திறங்குகிரார்கள். காலைக்கெந்தியவாரு ஒரு சைக்கிளின் பாரிலிருந்து எந்திரத் துப்பாக்கியுடன் இறங்கும் சீலனின் தலைமையில், கட்டளை பிறக்கிறன.
பாதைகள் மறிக்கப்பட்டு, வாகனங்கள் திருப்பி அனுப்பபடுகிறன. வீதியைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தபின் இராணுவக் கூலிகளுடன் சீலன் நேருக்கு நேர் நின்று நடத்திய தாக்குதல் சாவைத் துச்சமாக மதித்த ஒருவனின் துணிச்சலுக்கு சாட்சி.
இந்தத் தாக்குதல் சம்பவம்பற்றிச் சிங்கள நூலாசிரியர் ஒருவர் விபரிக்கையில், “விடுதலைப் புலிகளோடு பாதுகாப்புப் படையினர் நின்று தாக்குப்பிடிக்ககூடியவர்கள் அல்லர் என்று மக்கள் புலிகளின் இராணுவத் திறமையை மெச்சினர்” என்று குறிப்பிடுகிறார்.
கந்தர்மடச் சம்பவம் நடைபெற்று இப்போது ஒன்றரை மாதமாகிவிட்டது.
ஜூலை 05ம் திகதி.
நேரம் நள்ளிரவைத் தாண்டிவிட்டது.
கொக்குவில் தாவடியில் ஒரு வீட்டுக்குள் சீலன் இராணுவ உடையில் எந்திரத் துப்பாக்கியுடன் நுழைகிறான். அந்த வீட்டுக்கரனைத் தட்டி எழுப்பி, தாங்கள் குருநகர் இராணுவ முகாமிலிருந்து வந்திருப்பதாகவும், தாவடிச் சந்தியில் தங்கள் ஜீப் பழுதாகி நிற்பதாகவும் வேனைத் தந்துதவுமாறும் கேட்கிறான். அந்த வீட்டுக்காரரும் பவ்வியமாக தனது வேனைக் கொடுக்கிறார்.
நள்ளிரவைத் தாண்டி 2.30 மணியளவில், சீலனின் பிற விடுதலைப் போராளிகளும் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிட்சாளையருகில் இந்த வானை நிறுத்திவிட்டு, ஆயுதங்காளோடு தொழிட்சாலைக்குள் நுழைகின்றனர்.
துப்பாக்கி முனையில், வாசலில் நின்ற காவலாளிகளையும் நேரப்பதிவாளரையும் கட்டி வைத்துவிட்டு, களஞ்சியப் பொறுப்பாளரின் சாவிகளை எடுத்துக்கொள்கின்றனர். ஐந்தே நிமிடங்களில் நான்கு பெரிய தகர்ப்புக் கருவிகளையும் பிற தேவையான உபகரணங்களையும் எடுத்துக்கொண்டு, தொழிட்சாலையை விட்டு வெளியேறுகின்றனர்.
அதிகாலை 4.30 மணியளவில், தாங்கள் பெற்றுக்கொண்ட டெலிக்காவானை மீண்டும் உரியவரிடம் ஒப்படைக்கிறார்கள்.
மிகத்திறமையாக சீலன் இயக்கத்துக்கு தேடித்தந்த தகர்ப்புக் கருவிகள், பிற்பட்ட காலத் தாக்குதல் நடவடிக்கைகளின் வெற்றிக்குப் பெருந்துணை புரிந்துள்ளன. ஆனால், இவற்றைத் தேடித்தந்த பின் பத்து நாட்களே சீலன் வாழ்ந்திருந்தான்.
1979ம் ஆண்டின் ஆரம்பப் பளுதியில் இயக்கத்தில் சேர்ந்த சீலன், 1981ம் ஆண்டிலிருந்து அரச படைகளால் தேடப்பட்டு வந்தான். இதன் பின், தலைமறைவு கெரில்லா வாழ்க்கையை மேற்கொண்ட சீலனின் புகைப்படங்கள் எதுவுமே அரச படைகளின் கைகளில் சிக்காமையினால் இவன் மக்கள் மத்தியில் வெவ்வேறு பெயர்களில் அரசியல் பணிகளை மேற்கொள்ளவது சாத்தியமா இருந்தது.
அரச படையினால் தேடப்பட ஆரம்பித்ததும், தனது வீட்டுக்குப் போவதை பூரணமாக நிறுத்திக்கொண்டு விட்டான். ஆஸ்பத்திரியில் நெஞ்சில் துப்பாகிக் காயத்திற்காக சிகிட்சை பெற்றுக்கொண்டிருந்த சமயத்தில்தான், அவனது தந்தை இறந்த செய்தி சில நாட்கள் கழித்தி அவனுக்குத் தெரிய வந்தது. தந்தையும் இல்லாத நிலையில், தன் தாய் பொறுப்பு மிகுந்த அந்தக் குடும்பத்தைக் காப்பாற்ற கஷ்டமுற்றிருப்பாள் என்று, சீலன் நினைக்காமல் இருந்திருப்பான் எனாச் சொல்ல முடியாது. தனது குடும்பப் பிரச்சினைகள் குறித்து நெருங்கிய நண்பர்காளிடம் மிக அபூர்வமாகவே கதைத்திருக்கிறான்.
சீலன் லூக்காசிற்கும் செபமாலைக்கும் மட்டுமே தான் சொந்தமானவன் அல்லன் என்று உணர்ந்திருந்தான்.
சீலன் இவன்தானா என்று அடையாளம் காணத் திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாண ஆஸ்பத்திரியின் சவச்சாலைக்குக் கொண்டுவரப்பட்ட சீலனின் தாய், ஆடாமல் அசையாமல் நின்றால், நெற்றிப்போட்டிலே பாய்ந்த துப்பாக்கிச் சன்னத்தால் தலை சிதைந்த நிலையிலே, தான் பெற்ற அழகுச்செல்வன் கிடத்தப்பட்டிருப்பதை அவள் கண்ணீர் திரையிட உற்று நோக்குகிறாள், நான்கு வருடங்களுக்கு முன் மெல்லியவனாக வீட்டை விட்டு வெளியேறிய மகன், வாட்டசாட்டமாக வளர்ச்சி கொண்டவனாக – அடையாளமே கண்டுபிடிக்க முடியாத அளவு மாறிப்போய் கிடத்தப்பட்டிருக்கிறான். அந்த மச்சம், உதடுகள், சிதைவுக்கூடாகவும் முழுமை காட்ட முயலும் முகம், பெற்றவள் இணங்காண்கிறாள்.
அது அவளுடைய செல்வந்தான்.
அரைமணி நேரமாக அவள் அவனைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள். துயரன்தொந்த அந்தத்
தாயின் பக்கத்திலே சீலனின் அண்ணன் அந்த உடலை வெறித்துப்
பார்த்துக்கொண்டிருக்கிறான்.
அமைதியை இராணுவப் படையில் ஒருவன் குலைக்கிறான்.
“இது ஒண்ட மகனா?” கொச்சைத் தமிழில் கேட்கிறான்.
கண்ணீர் வழிய தாய் தலையசைக்கிறாள். தன் மகனின் உடலைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு அந்தத் தாய் அங்கு நின்ற மேஜரிடம் வேண்டுகிறாள்.
அவனோ வெறுப்பை உமிழ்கிறான்.
அந்தச் ‘செல்வமகனின்’ உடல் அந்தத் தாய்க்குச் சொந்தம் – இது தர்மம்.
அந்த ‘விடுதலை வீரனின்’ உடல் அரசுக்கு சொந்தம் – இது சட்டம்.
தான் பெற்ற மகனைக் கெளரவமாக அடக்கம் செய்ய நினைத்த அந்த ஏழைத் தாயின் உரிமையைத், ‘தார்மீக’ அரசின் பயங்கரவாதம் நெரித்தது.
சீலன் உயிரோடிருந்ததைவிட அவன் மரணித்தபோதுதான் அரசுக்குப் பெரும் சவாலானான். புரட்சிவாதிகளின் வாழ்க்கை சாவுக்குப் பிறகுதான் ஆரம்பமாகிறது.
அவனுடைய சடலம் கிடத்தப்பட்டிருந்த வைத்தியசாலை பலமான இராணுவக் காவலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.
அதற்குப்பின் அந்த தாய்க்கு அந்த வீரமகனின் சடலத்தை பார்க்க முடியவில்லை.
லட்சோப லட்சக்கணக்கான தமிழ் மக்களின் இதயங்களிலே அணையாத புரட்சித் தீயாக ஒழி வீசிக்கொண்டிருக்கும் சீலனின் சடலம், யாருக்கும் தெரியாமல் அவசரகாலச் சட்டத்தின் கிழ் இராணுவ மிருகங்கள் சூழ்ந்து நிற்க எரிக்கப்பட்டது.
விடுதலைக்காகவே வாழ்ந்த அந்த வீரமகனை தலைவர் பிரபாகரன் கண்ணீருடன் நினைவு கூர்கிறார்.
“எவ்வளவு அற்புதமானவன் என் சீலன் !”
“ஆசையாகவல்லவா நான் அவனுக்கு இதயச்சந்திரன் என்று பெயர் வைத்தேன்….!”
“இவ்வளவு சீக்கிரமா என்னை விட்டுப் போனான்?”
“அவனது மரணச் செய்தி பொய்யாகப் போய்விடாதா என்று என் மனம் நடுங்கியதே…”
“எவ்வளவு கஷ்டங்களில் உயிருக்குயிராய் துணை நின்றான்…”
“காடுகளில் அவனோடு திரிந்த காலங்கள் தான் எத்தனை மகத்தானவை…”
“லட்சியங்களோடு காத்திருந்தானே…”
“ஏன் தீடிரென இப்படி இல்லாமல் போனான்?”
“மீண்டும்…. மீண்டும்…..
நினைவிற் சுழல்கிறது – அது.
அந்த அழகு முகம்.
அந்த மழலைச் சிரிப்பு.
அந்தப் பாட்டு.
அன்று –
இரவு சூழ்ந்துவிட்டது.
சலசலக்கும் காட்டு மரங்கள்.
சருகுகளின் ஓசை,
சில்வண்டுகளின் ரீங்காரம்.
காற்றின் வருடலில்,
கனலும் தீக்கங்குகள்,
குழுமியிருக்கும் விடுதலை இளவல்கள்.
அவர்களிடையே பல்சுவை நிகழ்ச்சி.
அது சீலனின் முறை.
அவனுக்கு பாட்டு.
அதோ சீலன்!
எப்போதும்போல் கட்டமிட்ட சட்டை;
கணுக்காலுக்கு மேல் மடித்துவிட்ட ஜீன்ஸ்.
அவனிடம் கூச்சம்.
சிரித்துச் சமாளிக்கின்றான்.
நண்பர்களின் தூண்டுதல்.
பாட்டின் ஆரம்பம்.
ஆரவாரமான வரவேற்பு.
உற்சாகமடைகிறான்.
கைகளை அகலவிரித்து கம்பீரமாகப் பாடுகிறான்.”
“அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும். இதோ இந்த அலைகள் போல…….”
– நெருப்பாற்று நீச்சலின் பத்தாண்டு நூலிலிருந்து வேர்கள்.


